- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் வாக்கி டாக்கி மூலம் தன்னுடைய பிளான் அனைத்தையும் சொல்ல, அதை ஜனனி கேட்டுவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி இன்னும் சாகவில்லை என்கிற தகவல் ஆதி குணசேகரனுக்கு தெரியவந்திருக்கிறது. இந்த தகவலை போன் போட்டு சொன்ன தேவசகாயம், தான் யார் எங்கிருந்து அழைக்கிறேன் என்கிற விவரத்தை கூற மறுத்துவிடுகிறார். இருப்பினும் தான் இன்னும் சில தினங்களில் ஜனனியை கொன்றுவிடுவேன் என்கிற தகவலையும் அவர் சொல்லி இருப்பதால் சற்று ஆறுதல் அடைகிறார் ஆதி குணசேகரன். மறுபுறம் ஜனனிக்கு உங்களால் எதாச்சும் ஆச்சுனா எல்லோரையும் வெட்டி போட்டுருவேன் என சக்தி அனைவரையும் மிரட்டி இருக்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கதிரை எதிர்க்கும் நந்தினி
வீட்டில் நந்தினியை அடக்கி ஆளப்பார்த்த கதிர், அவரை பேச அழைத்து, இனிமேல் என்னுடைய பேச்சைக் கேட்டு இந்த வீட்டில் இரு என சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் நந்தினி, முன்னமாதிரி, முந்தானைல கண்ண கசக்கிட்டு, ஏங்க இது நம்ம வாழ்க்கைங்க, நம்ம புள்ள வாழ்க்கைங்கனு சொல்லிட்டு அழுவேன்னு நினைச்சியா... போயா, அதெல்லாம் இனி நடக்கவே நடக்காது என சொல்லி நோஸ்கட் பண்ணிவிட்டுள்ளார். இதைக்கேட்ட கதிர் கதிகலங்கிப் போய் இருக்கிறார். இதையடுத்து எகிறும் ஞானத்திடம் அவருடைய மனைவி ரேணுகா பேசுகையில், நான் 2 கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க, 5 நிமிஷத்துல என்னோட அம்மாகிட்ட சொல்லி புள்ளைய கூட்டிட்டு வரச் சொல்றேன் என சவால் விடுகிறார்.
ஜனனியிடம் சிக்கும் வாக்கி டாக்கி
மறுபுறம் தேவசகாயத்தின் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் ஜனனி, அங்கிருந்து தப்பித்துச் செல்லாமல் இருக்க அவரது காலை செயலிழக்க செய்யும் வகையில் ஒரு ஊசியை போட்டிருக்கிறார்கள். இதனால் ஜனனி எங்கும் நடந்து செல்ல முடியாமல் ரூமிலேயே அடைபட்டு கிடக்கிறார். அப்போது ஜனனிக்கு அந்த வீட்டு வேலைக்காரி வசந்தா ஜூஸ் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் தன் கையில் கொண்டு வந்த வாக்கி டாக்கியை ஜனனியின் ரூமிலேயே விட்டுச் செல்கிறார் வசந்தா. இதை நோட் பண்ணும் ஜனனி, அந்த வாக்கி டாக்கியை எடுத்து அதில் தேவசகாயம் பேசுவதை கேட்கிறார்.
தேவசகாயத்தின் பிளான்
இன்னைக்கு அவுட் ஹவுஸில் இருக்கும் பொண்ணுக்கு சர்ஜரி, ஜனனி வந்த தடயமே தெரியக்கூடாது. இன்னைக்கு அவுட் ஹவுஸில் இருக்கும் பொண்ணின் கதையை முடிச்சுக்கு ஜனனியை நாளை முடிச்சிடலாம் என கிறிஸ்டோபர் என்பவரிடம் பேசுகிறார் தேவசகாயம். இதையெல்லாம் வாக்கி டாக்கி வழியாக ஜனனி கேட்டுவிடுகிறார். தேவசகாயம் யார்? அவர் எதற்காக தன்னை அந்த வீட்டில் அடைச்சு வச்சிருக்கான்? என்கிற உண்மை அவர் மூலமாகவே ஜனனிக்கு தெரியவந்திருக்கிறது.
தப்பிப்பாரா ஜனனி?
ஆரம்பத்தில் தேவசகாயத்தை சாதரணமாக எடைபோட்டிருந்தார் ஜனனி. ஆனால் அவனோ அவர் எதிர்பார்த்ததைவிட ரொம்ப டேஞ்சர் ஆன ஆளாக இருக்கிறார். அவனுடைய பிடியில் இருந்து தப்பிக்க யுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஜனனி. அதற்காக தற்போது தயாராகி வருகிறார். ஜனனியை கொன்று அவரது உடல் உறுப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கும் தேவசகாயத்தின் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? இந்த இடத்தில் இருந்து ஜனனி எப்படி தப்பிக்கப் போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

