- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Vijay TV : மளமளவென சரிந்த டிஆர்பி ரேட்டிங்; இந்த வார டாப் 5 விஜய் டிவி சீரியல்கள் லிஸ்ட் இதோ
Vijay TV : மளமளவென சரிந்த டிஆர்பி ரேட்டிங்; இந்த வார டாப் 5 விஜய் டிவி சீரியல்கள் லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் இந்த வாரம் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி உள்ளிட்ட சீரியல்களின் டிஆர்பி நிலவரத்தை பார்க்கலாம்.

Top 5 Vijay TV Serials TRP
தமிழ் நாட்டில் சன் டிவிக்கு நிகராக சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இதில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு டிஆர்பியும் அதிகளவில் கிடைத்து வருகிறது. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி மளமளவென சரிந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால் இந்த வாரம் ஒரு சீரியல் கூட 8 டிஆர்பி புள்ளிகளை தாண்டவில்லை. 2025-ம் ஆண்டின் 26வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று முதல் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
டிஆர்பியில் அதள பாதாளத்துக்கு சென்ற மகாநதி
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. இதில் லட்சுமி பிரியா, ஆதிரை ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். கடந்த வாரம் யமுனா கதாபாத்திரத்தில் நடித்த ஆதிரை, மகாநதி சீரியலை விட்டு விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்வேதா என்கிற நடிகை நடித்து வருகிறார். ஆதிரையின் விலகலுக்கு பின்னர் மகாநதி சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் 5.25 புள்ளிகளாக இருந்த மகாநதி சீரியலின் டிஆர்பி இந்த வாரம் மளமளவென சரிந்து வெறும் 4.90 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சின்ன மருமகள் டிஆர்பி என்ன?
மகாநதி சீரியலை தொடர்ந்து நவீன் மற்றும் ஸ்வேதா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் சின்ன மருமகள் சீரியல் 4ம் இடத்தில் உள்ளது. தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 6.20 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட மிகவும் கம்மியாக... அதாவது 5.50 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நிரோஷா, ஸ்டாலின், ஹேமா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலின் டிஆர்பியும் சரிந்துள்ளது. கடந்த வாரம் 6.58 புள்ளிகள் பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.40 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல் எது?
சமீப காலத்தில் தமிழ்நாட்டில் மளமளவென ரசிகர்களை ஈர்த்து வந்த தொடர் என்றால் அது அய்யனார் துணை சீரியல் தான். மதுமிதா நாயகியாக நடிக்கும் இந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 7.78 புள்ளிகள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த வாரை அதைவிட குறைவாக வெறும் 7.43 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. வழக்கம்போல் இந்த வாரம் விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக சிறகடிக்க ஆசை உள்ளது. வெற்றிவசந்த் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 8.05 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்தது. ஆனால் இந்த வாரம் அது மளமளவென குறைந்து வெறும் 7.85 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.