- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Vijay TV : விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்; ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா?
Vijay TV : விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்; ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா?
பிரியங்கா தேஷ்பாண்டே முதல் கோபிநாத் வரை விஜய் டிவி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay TV Anchors Salary
தமிழ் நாட்டில் சீரியல்களுக்கு சன் டிவி தான் டாப்பு என்றால் ரியாலிட்டி ஷோக்களுக்கு விஜய் டிவி தான் நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது. இதில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக் பாஸ் என பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன. இந்த ஷோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த ஷோக்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு மிக முக்கிய காரணம் அதன் தொகுப்பாளர்கள் தான். அப்படி ரியாலிட்டி ஷோக்களின் தூணாக இருந்து வரும் தொகுப்பாளர்களுக்கு விஜய் டிவி எவ்வளவு சம்பளத்தை வாரி வழங்குகிறது. அதில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரக்ஷன் சம்பளம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். அதில் ஜாக்குலின் உடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆனதால் அந்த ஷோ வேறலெவல் ஹிட் ஆனது. கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தது மட்டுமின்றி, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடித்தும் இருந்தார் ரக்ஷன். இதனால் அவரின் நடிப்புத் திறமையையும் வெளிப்பட்டது. அதன் வாயிலாக அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ரக்ஷன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து ரக்ஷனுக்கு கிடைத்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் ஷோ தான் குக் வித் கோமாளி. இதன் 6 சீசன்களையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளிக்காக ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார் ரக்ஷன்.
மாகாபா ஆனந்த் சம்பளம்
விஜய் டிவி மூலம் பேமஸ் ஆன மற்றுமொரு தொகுப்பாளர் தான் மாகாபா ஆனந்த். இவர் ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றி வந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் அதுஇதுஎது நிகழ்ச்சியில் இருந்து விலகி சினிமாவுக்கு சென்றதை அடுத்து அந்நிகழ்ச்சியை மாகாபா தான் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ரீச் ஆனார் மாகாபா. இதையடுத்து அவருக்கும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஆனால் சிவகார்த்திகேயனை போல் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் கிளிக் ஆகவில்லை.
இதனால் மீண்டும் விஜய் டிவியிலேயே ஐக்கியமான மாகாபா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் பாவனா உடன் இணைந்து தொகுத்து வழங்கிய அவர் தற்போது பிரியங்கா உடன் ஜோடியாக தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் டைமிங் காமெடிகளால் அதகளம் செய்து அந்நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்கள். தற்போது மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
பிரியங்கா தேஷ்பாண்டே சம்பளம்
விஜய் டிவியில் டிடி, ரம்யா என பல பெண் தொகுப்பாளர்கள் முன்பு இருந்தார்கள். அவர்கள் விஜய் டிவியை விட்டு வெளியேறிய பின்னர் சீனியர் தொகுப்பாளினியாக பிரியங்கா தேஷ்பாண்டே இருந்து வருகிறார். இவர் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதுதவிர குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சூப்பர் சிங்கர் மட்டுமின்றி பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் என்கிற ரியாலிட்டி ஷோவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்நிகழ்ச்சியை தன்னுடைய வெகுளியான பேச்சால் மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார் பிரியங்கா. இப்படி சீனியர் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீயா நானா கோபிநாத் சம்பளம்
விஜய் டிவியில் சீனியர் தொகுப்பாளர் என்றால் அது கோபிநாத் தான். இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் ராஜ் டிவியில் பணியாற்றிய கோபிநாத், பின்னர் விஜய் டிவிக்கு வந்த நீயா நானா என்கிற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார். அந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததாலும் அதை அவரைவிட யாரும் திறம்பட நடத்த முடியாது என்கிற பெயரை எடுத்ததாலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத்.
நீயா நானா நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கோபிநாத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள சில முன்னணி யூடியூப் சேனல்களுக்காக பல்வேறு பிரபலங்களுடன் பேட்டி எடுப்பதற்காகவும் கோபிநாத்துக்கு லட்சக் கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இது மட்டுமின்றி சொந்தமாக தன் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் கோபிநாத். அதன் மூலமும் அவருக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
பிக் பாஸ் விஜய் சேதுபதி சம்பளம்
விஜய் டிவியிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இவர் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 8வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இனி அடுத்தடுத்த சீசன்களிலும் விஜய் சேதுபதியே தொகுப்பாளராக இருப்பார் என்றே கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 60 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. அவர் வார இறுதியில் ஒரு நாள் மட்டுமே ஷூட்டிங் வருவார். அதிலேயே சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடை எடுத்துவிடுவார்கள். அப்படி பார்த்தால் மொத்தம் 15 நாள் ஷூட்டிங்கிற்காக அவருக்கு 60 கோடி வழங்கப்படுகிறது. இதில் ஒரு எபிசோடுக்கு அவர் 4 கோடி சம்பளமாக வாங்குகிறார்.