- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவிக்கு போட்டியாக ஒரே நேரத்தில் 3 புத்தம் புது சீரியல்களை இறக்கிய விஜய் டிவி
சன் டிவிக்கு போட்டியாக ஒரே நேரத்தில் 3 புத்தம் புது சீரியல்களை இறக்கிய விஜய் டிவி
விஜய் டிவியில் மூன்று புத்தம் புது தொடர்கள் ஜூன் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

Vijay TV New Serials
சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என்று இருந்த காலம் போய் தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என பல்வேறு சேனல்களில் சின்னத்திரை தொடர்கள் போட்டிபோட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டிஆர்பி-யில் சன் டிவியில் செம டஃப் கொடுத்து வரும் விஜய் டிவி புதிதாக மூன்று சீரியல்களை இறக்கி உள்ளது. அந்த சீரியல்களில் 2 சீரியல்கள் ஜூன் 2ந் தேதியும், மற்றொரு சீரியல் ஜூன் 9ந் தேதியும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் டப்பிங் தொடர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மூன்று சீரியல்களில் இரண்டு தொடர்கள் டப்பிங் தொடர்களாகும். அதில் ஒரு சீரியலின் பெயர், ‘சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்’ என்கிற பக்தித் தொடர். இந்த தொடர் வருகிற ஜூன் 2ந் தேதி முதல் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மற்றொரு தொடரின் பெயர் ‘அதே கண்கள்’. இந்தியில் மோனாலிசா நடித்து சக்கைப்போடு போட்ட சீரியலின் தமிழ் டப்பிங் தான் இந்த தொடர். இது வருகிற திங்கட்கிழமை முதல் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்றலே மெல்ல பேசு சீரியல்
விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மற்றொரு சீரியலின் பெயர் ‘தென்றலே மெல்ல பேசு’. இந்த சீரியலில் ரேவதி முரளி நாயகியாக நடித்துள்ளார். மராத்தி மொழியில் வெற்றிபெற்ற "யெட் லாக்லா பிரேமா" என்கிற சீரியலில் ரீமேக் ஆக இந்த சீரியல் உருவாகி உள்ளது. இந்த சீரியலில் விமல்ராஜ், வந்தனா மைக்கேல், ஸ்ரீலேகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் வருகிற ஜூன் 9-ந் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்றலே மெல்ல பேசு சீரியல் கதை என்ன?
பொன்னி சீரியலுக்கு பதில் தென்றலே மெல்ல பேசு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாகி உள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் திருமணத்தை பார்த்து பயப்படும் ஒரு இளம்பெண்ணின் கதை இது. ஒரு உள்ளூர் ரவுடி அவளது வாழ்க்கையில் நுழைகிறான். அதன் பின் என்ன ஆனது என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் சொல்லும் தொடர் தான் தென்றலே மெல்ல பேசு.