- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Vijay TV : மீண்டும் முதலிடத்துக்கு சிட்டாக பறந்து வந்த சிறகடிக்க ஆசை; இந்த வார டாப் 5 சீரியல்கள்
Vijay TV : மீண்டும் முதலிடத்துக்கு சிட்டாக பறந்து வந்த சிறகடிக்க ஆசை; இந்த வார டாப் 5 சீரியல்கள்
விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேஸில் அடுத்தடுத்து முன்னேறி வரும் நிலையில், இந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Vijay TV Serial TRP
இல்லத்தரசிகளை மட்டுமே கவரும் வண்ணம் எடுக்கப்பட்டு வந்த சின்னத்திரை சீரியல்கள், தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை போன்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் உள்ளதால், அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் அது கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெறும் சீரியல் எது என்பதை அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து கணிப்பார்கள். அதன்படி 2025-ம் ஆண்டின் 22வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மகாநதி சீரியலுக்கு பின்னடைவு
அந்த வகையில் கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த மகாநதி சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 5.49 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சின்ன மருமகள் சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. நவீன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக உள்ளதால் இதற்கு 5.57 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஸ்டாலின், நிரோஷா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம், கடந்த வாரம் முதல் முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தி இருந்தது. ஆனால் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டிஆர்பியில் சரிவை சந்தித்து உள்ளது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.98 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் இந்த வாரம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
மீண்டும் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்
கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த அய்யனார் துணை சீரியல், இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்து உள்ளது. அந்த சீரியலுக்கு 7.38 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 3வது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் சிட்டாக பறந்து வந்து முதலிடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 7.47 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. இதனால் டிஆர்பி ரேஸில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.