அந்த நடிகரை பதம் பார்க்கனும்... திருமணமான நடிகர் மீதுள்ள ஆசையை வெளிப்படுத்திய ரேஷ்மா - ஷாக்கான ரசிகர்கள்
பாக்யலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி, பிரபல நடிகரை பதம் பார்க்கனும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சூரியின் மனைவியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு, அதன்பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
அந்த சீரியல் டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்த சீரியலில் ரேஷ்மா நடித்து வரும் ராதிகா என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி உள்ள சீதா ராமன் என்கிற தொடரிலும் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவர்... சூர்யா குடும்பத்தின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள் - சர்ச்சைக்குள்ளான கீழடி விசிட்..!
நடிகை ரேஷ்மாவுக்காக சமீபத்தில் ஃபேன்ஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அவர், தன்னைப்பற்றிய சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கமெண்ட்டுகள் குறித்து ஓப்பனாக பதிலளித்துள்ளார். அப்போது நெட்டிசன் ஒருவர், ‘எனக்கு உன்னை பதம் பார்க்கனும்’ என கொச்சையாக கமெண்ட் செய்தது குறித்து ரேஷ்மாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு அதெல்லாம் நடக்காத விஷயம் என சொல்லிவிட்டு, அவர் சொன்ன மற்றொரு பதில் தான் பேசு பொருள் ஆகி உள்ளது.
அது என்னவென்றால், எனக்கு கூட தான் ரன்பீர் கபூரை பதம் பார்க்கனும், அதை பண்ண முடியுமா, ஆலியா பட் என்னை செருப்பால அடிக்க மாட்டா, பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க, நாம நம்ம வேலைய பார்த்துட்டு போய்கிட்டே இருக்கனும் என அந்த நேர்காணலில் ரேஷ்மா கூறி உள்ளார். அவரின் இந்த பதிலை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள், இதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். திருமணமான நடிகர் குறித்து இப்படி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... முத்து மணியால் செய்த... அழகிய வெள்ளை நிற லெஹங்காவில் அசரவைக்கும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!