இதெல்லாம் ரொம்ப ஓவர்... சூர்யா குடும்பத்தின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள் - சர்ச்சைக்குள்ளான கீழடி விசிட்..!
கீழடியில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிட நடிகர் சூர்யாவின் குடும்பம் வந்திருந்தபோது பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை வெயிலில் காக்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா, அண்மையில் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டார். சென்னையில் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சூர்யா திடீரென மும்பையில் குடியேறியதை அடுத்து அவர் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே மும்பைக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. பின்னர் தான் அவர் தனது குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் குடியேறியதாக தெரியவந்தது.
அதே நேரத்தில் சூர்யாவுக்கு சிவகுமாருக்கும் இடையே எந்தவித சண்டையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றைய சம்பவம் அமைந்திருந்தது. சூர்யா, தனது குடும்பத்தினருடன் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சூர்யாவின் தந்தை சிவகுமாரும் வந்து தனது மகனுடன் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்தார்.
சூர்யா உடன் அவரது மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். சூர்யா குடும்பம் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்தபோது மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் உடன் இருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா கீழடியில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு பெருமையாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த சூர்யா, ஜோதிகா
இந்நிலையில், சூர்யாவின் கீழடி விசிட் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. நடிகர் சூர்யா நேற்று காலை 9.30 மணிக்கு கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்துள்ளார். வழக்கமாக அங்கு காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுமாம். ஆனால் நேற்று சூர்யா குடும்பம் வந்திருந்ததன் காரணமாக சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பொதுமக்களை உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
சூர்யா தனது குடும்பத்தினருடன் ஒன்றரை மணிநேரம் அருங்காட்சியகத்தை பார்வையிட்டதாகவும், அவர் அங்கிருந்து கிளம்பிய பின்னரே பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
அதுமட்டுமின்றி சூர்யா குடும்பத்திற்காக பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க செய்ததற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன. பள்ளி மாணவர்களைவிட சூர்யா குடும்பம் தான் முக்கியமா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கதாநாயகனாக வெற்றி கண்ட சூரி..! விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?