- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பணக்கஷ்டத்தால் காரை விற்ற ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்..செய்தி கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்
பணக்கஷ்டத்தால் காரை விற்ற ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்..செய்தி கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்
ஆல்யா வந்த பின்பு இருவரும் கார், வீடு, பங்களா என செட்டிலாகி விட்டதாகவும் கூறியுள்ளார் சஞ்சீவ்.

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ். விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் இருவரும் அறிமுகமாகி இருந்தனர். அதில் வசதியான வீட்டில் வேலை செய்யும் படிக்காத பெண், அந்த வீட்டின் இளைய மகனை திருமணம் திருமணம் செய்து கொள்ளும் கதைக்களத்தை இந்த சீரியல் கொண்டிருந்தது.
காதலித்து கரம் பிடித்த பின்னர் நாயகி அந்த குடும்பத்தினரால் படும் இன்னல்கள். பின்னர் குடும்பத்திற்காக நாயகி செய்யும் செயல்கள் என ஆலியா மானசா அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...Brahmastra movie OTT release date : பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Alyamanasa
இதையடுத்து ராஜா ராணி சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலிலும் முதலில் ஆல்யாதான் நாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது முறையாக தாயானதால் சீரியலில் இருந்து விலகி இவர் தற்போது வேறொரு சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சஞ்சீவி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் நாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் இரண்டாவது முறையாக ஆண் குழந்தைக்கு பெற்றோரான இந்த நட்சத்திர தம்பதிகள் அவ்வப்போது தங்களுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவ வீடியோ வரை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. இப்போ எங்க போச்சு உங்க மனிதாபிமானம்... தனலட்சுமியை தாக்கிய அசீம் - வீடியோ பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்
alya manasa
தற்போது கலா மாஸ்டர் நடத்தி வரும் சிறப்பு பேட்டியில் பேசியுள்ளார் சஞ்சீவ். கலைத்துறைக்கு இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியவர் கலா மாஸ்டர் தான். அவருடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த தம்பதிகள் தங்களது முந்தைய வாழ்க்கை குறித்து கண்ணீருடன் பேசியது ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
alya manasa
அந்த நிகழ்ச்சிகள் பேசிய சஞ்சீவ் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் இருக்கும்போது பெட்ரோல் போட கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சஞ்சீவ். அதன்பின் தான் ராஜா ராணி சீரியல் வாய்ப்பு வந்தது. பின்னர் லைப்ஃபே மாறிவிட்டது. ஆல்யா வந்த பின்பு இருவரும் கார், வீடு, பங்களா என செட்டிலாகி விட்டதாகவும் கூறியுள்ளார் சஞ்சீவ்.