MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : நந்தி மாதிரி குறுக்க வந்த ஃப்ரண்ட்; கடும் அப்செட்டில் ராஜீ என்ன நடந்தது?

Pandian Stores 2 : நந்தி மாதிரி குறுக்க வந்த ஃப்ரண்ட்; கடும் அப்செட்டில் ராஜீ என்ன நடந்தது?

Raji and Kathir Romance : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 594ஆவது எபிசோடில் கதிருக்கு முதல் புக்கிங் வந்துள்ளதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 24 2025, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Image Credit : JIo Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் ஒரு வழியாக தனது கனவை நிறைவேற்றியுள்ளார். டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்பது தான் கதிரின் நீண்ட நாள் ஆசை. அதனை அப்பா பாண்டியன் கொடுத்த ரூ.10 லட்சம் கொண்டு டிராவல்ஸ் வைத்துள்ளார். இது பாண்டியனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்தது. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 594ஆவது எபிசொடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு; அதுக்குள்ள வேலைக்கு வரவானு கேட்ட தங்கமயிலின் அப்பா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
Image Credit : JIo Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு சுகன்யாவின் காட்சிகளுடன் தொடங்கியது. அதில், அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது கணவர் பற்றி ஆஹா ஓஹோ என்று பேச, அந்த நேரம் பார்த்து பழனிவேல் அங்கு வந்துள்ளார். இதனால், தான் சொன்னது எல்லாம் பொய் என்ற நிலைக்கு சுகன்யா வந்துள்ளார்.

ஆரம்பித்த ஒரே மாதத்தில் விஜய் டிவி சீரியலுக்கு விழுந்த அடி! ஹிட் சீரியல் நிறுத்தப்படுமா?

37
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Image Credit : Jio Hot Star Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

இதனால், பழனிவேலுவை திட்டி தீர்த்தார். இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்ததாக, கதிர் மற்றும் ராஜீ தொடர்னா காட்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், முதல் புக்கிங் வந்தது. இதைக் கேட்டு இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து கதிரின் ஃப்ரண்ட் வந்தார். அவரைப் பார்த்து லவ்வர்ஸ்க்கு இடையில் குறுக்கே வந்ததால், ராஜீ கொஞ்சம் கோபப்பட்டார்.

47
ராஜீ மற்றும் கதிர் ரொமான்ஸ் காட்சிகள்
Image Credit : Jio Hot Star Screen Shot

ராஜீ மற்றும் கதிர் ரொமான்ஸ் காட்சிகள்

சரி ஃப்ரண்டை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு ரொமான்ஸ் செய்யலாம் என்று ஆசையோடு இருந்த ராஜீக்கு கடைசியில் ஏமாற்றமே இருந்தது. கதிரும் அவருடன் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து தங்கமயில் மற்றும் அவருடைய பெற்றோர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பங்கேற்றுள்ளனர்.

ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

57
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதிர் திறப்பு விழா
Image Credit : Vijay Television YouTube Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதிர் திறப்பு விழா

டிராவல்ஸ் திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் அப்படியே சம்பந்தி வீட்டிற்கும் வந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடித்துள்ளனர். பின்னர் பாண்டியனிடம் டிராவல்ஸில் ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கேட்க, அதற்கு பாண்டியன் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறான். இப்போது வேலைக்கு ஆட்கள் தேவைப்படுமா இல்லையா என்பது பற்றி ஒன்றும் தெரியாது.

67
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதிர்
Image Credit : Vijay Television YouTube Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதிர்

அதனால், நீங்கள் என்னுடைய கடைக்கு வந்துருங்க. அங்க ஆட்கள் தேவைப்படுகிறது என்று சொல்ல, மாணிக்கத்திற்கு ஒரே குஷி. ஆனால், இது தங்கமயிலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்பா மாணிக்கம் இதுவரையில் எந்த வேலைக்கும் சென்றதில்லை. அதனால், மாமனார் கடையில் அவரால் வேலை பார்க்க முடியாது என்று அவருடன் வாக்குவாதம் செய்தார்.

77
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Image Credit : Jio Hot Star Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

இந்த சூழலில் தான் மாணிக்கம் இன்று பாண்டியன் கடை எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தார். அவருக்கு கூல்டிரிங்க்ஸ் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் சரவணனுக்கு உண்மை தெரியும். உன்னுடைய மாமனார் இங்கு தான் வேலைக்கு வரப் போகிறார் என்று சொல்ல, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், என்னப்பா அவர் எப்படி வேலை பார்ப்பார். 

இது சரியாக வருமா என்று கேட்டார். என்ன செய்ய, குமரேஷன் வேறு ஊருக்கு போய்விட்டார். எப்போது வருவார் என்று தெரியவில்லை. கடைக்கு ஆள் தேவை. அதனால், தான் அவரை வேலைக்கு வரச் சொன்னேன். சரி என்ன பண்ணுறது. போக போக தானே எப்படி வேலை பார்ப்பார் என்று தெரியும் என்றார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved