ஆரம்பித்த ஒரே மாதத்தில் விஜய் டிவி சீரியலுக்கு விழுந்த அடி! ஹிட் சீரியல் நிறுத்தப்படுமா?
Magale En Marumagale: விஜய் டிவியில் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட ' மகளே என் மருமகளே' சீரியலின் இயக்குனர் மரணத்தால் இந்த தொடர் நிறுத்தப்படுமா என்கிற பேச்சு அடிப்பட துவங்கியுள்ளது. மாமியார் மற்றும் மருமகள் கதை

இயக்குனர் நாராயண மூர்த்தி:
தமிழில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்து, கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன, 'மனதை திருடிவிட்டாய்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நாராயணமூர்த்தி. இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற போதும், வசூல் ரீதியாக வெற்றிபெற தவறிவிட்டது. அதே சமயம் இப்படத்தில், மறைந்த காமெடி நடிகர் விவேக் மற்றும் வடிவேலுவின் காமெடி அதிக அளவில் பேசப்பட்டது.
ஜீ தமிழ் சீரியல்:
இந்த படத்தை தொடர்ந்து, 'ஒரு பொண்ணு ஒரு பையன்' என்கிற படத்தை இயக்கிய நாராயண மூர்த்தி, வெள்ளித்திரையில் வெற்றி கிடைக்காததால், சீரியல் பக்கம் சாய்ந்தார். பல சீரியல்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கி உள்ளார்.
மகளே என் மருமகளே:
அதே போல் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட, ' மகளே என் மருமகளே' என்கிற சீரியலை இயக்கி உள்ளார். இந்த தொடர், தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக வர்ஷினி நடிக்க, அவினாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்க... நவீன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
Pandian Stores 2 : நந்தி மாதிரி குறுக்க வந்த ஃப்ரண்ட்; கடும் அப்செட்டில் ராஜீ என்ன நடந்தது?
நாராயணமூர்த்தி மரணம்:
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தலையில் இடியை இறக்குவது போல், இந்த சீரியலின் இயக்குனர் நாராயணமூர்த்தியின் மரணம் அமைந்துள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த சீரியலுக்கு புதிய இயக்குனர் மாற்றப்படுவாரா? அல்லது இந்த சீரியல் நிறுத்தப்படுமா? என்கிற சந்தேகத்தை நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ஆசியுடன்... சினிமாவில் கால்பதிக்கும் ஜெர்மனி வம்சாவெளியை சேர்ந்த தமிழன்!
புதிய இயக்குனர்:
பல சீரியல்களில், அந்த தொடரை விட்டு இயக்குனர் வெளியேறிய பின்னர் வேறு ஒரு இயக்குனர், அவருடைய பாணியில் சீரியலை இயக்குவது வழக்கமான ஒன்றாகவே இருக்கும் நிலையில், கூடிய விரைவில் இந்த தொடரின் புதிய இயக்குனர் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 59 வயதே ஆகும் நாராயண மூர்த்திக், அம்சவேணி என்கிற மனைவியும், லோகேஸ்வரன் என்கிற மகனும் உள்ளனர். இவருடைய மகன் லண்டனில் பணியாற்றி வருவதால் இவருடைய இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!