MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியனை வம்பில் மாட்டிவிட்ட வானதி... நள்ளிரவில் காத்திருந்த சம்பவம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

பாண்டியனை வம்பில் மாட்டிவிட்ட வானதி... நள்ளிரவில் காத்திருந்த சம்பவம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் உடன் பெங்களூரு சென்றிருந்த வானதி, வீட்டுக்கு வராததால், அவரது பெற்றோர் பாண்டியன் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 03 2026, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் வானதி அடம்பிடித்து பாண்டியன் உடன் பெங்களூருக்கு சென்றிருந்த நிலையில், இரவு வர லேட் ஆனதால், அவரது வீட்டில் அவரை வலைவீசி தேடத் தொடங்கி இருக்கிறார்கள். ஒருவேளை அவளை பாண்டியன் அழைத்துக் கொண்டு ஓடிவிட்டானா என பயந்து, முதலில் பாண்டியனின் ஒர்க் ஷாப்பில் தான் தேடுகிறார் வானதியின் அண்ணன். அங்கு சென்று விசாரித்த போது தான் அவர்கள் இருவரும் பெங்களூருக்கு சென்றிருக்கும் விஷயம் தெரியவருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பாண்டியனிடம் விசாரிக்கும் சேரன்
Image Credit : jiohotstar

பாண்டியனிடம் விசாரிக்கும் சேரன்

பாண்டியன் கடையில் சென்று விசாரித்த பின்னர், நேராக பாண்டியனின் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார் வானதியின் அண்ணன். அவரோடு வானதியின் பெற்றோரும் அங்கு சென்று பிரச்சனை பண்ணுகிறார்கள். அப்போது பேசும் சேரன், பாண்டி காலையிலேயே கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க பெங்களூருக்கு போயிட்டான். அதனால் அவனோடு வானதி சென்றிருக்க வாய்ப்பே இல்லை என கூறுகிறார். நீங்க வானதியோட பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டுப் பாருங்க என சொல்கிறார். சரி எதுக்கும் தம்பிகிட்ட கேட்டுப் பார்ப்போம் என சேரன் போன் போட, பாண்டியனும் வானதி தன்னுடன் இருப்பதாக சொல்லிவிடுகிறார்.

Related Articles

Related image1
பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
34
கோபமடைந்த வானதியின் பெற்றோர்
Image Credit : jiohotstar

கோபமடைந்த வானதியின் பெற்றோர்

அதன்பின்னர் சேரன், வானதியின் பெற்றோரிடம், என் தம்பி கூட தான் உங்க பொண்ணு இருக்கு, நீங்க பயப்பட வேண்டாம். நீங்க வீட்டுக்கு போங்க, அவனே வீட்ல கொண்டு வந்து விடுவான்னு சொல்கிறார். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்கள். அண்ணன் போன் போட்டு விசாரித்ததால், கண்டிப்பாக பிரச்சனையாகி இருக்கும் என்பதை யூகிக்கும் பாண்டியன், வானதி மீது செம கோபத்தில் இருக்கிறார். வேண்டாம்னு சொல்லியும் கேட்காம, வானதி காரில் வந்ததால் தான் இவ்வளவு பிரச்சனை, வீட்டுக்கு போக நள்ளிரவு ஆகிவிடும். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்.

44
வானதி வீட்டிற்கு சென்ற பாண்டியன்
Image Credit : jiohotstar

வானதி வீட்டிற்கு சென்ற பாண்டியன்

ஒருவழியாக இரவில் வானதியும், பாண்டியனும் ஊருக்கு வந்துவிடுகிறார். நேராக வானதியின் வீட்டிற்கு தான் பாண்டியன் காரை விடுகிறார். ஆனால் வானதி, தான் போக மாட்டேன் என அடம்பிடிக்கிறார். நான் இவ்வளவு லேட்டா போனா என்னை என் வீட்டில் அடிப்பார்கள். அதனால் என்னை உன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போயிடு என சொல்கிறார். இந்த நேரத்துல என் வீட்டுக்கு எப்படி நான் உன்னை அழைச்சிட்டு போக முடியும். அதெல்லாம் முடியாது என சொல்லும் பாண்டியன், வானதியை காரில் இருந்து இறக்கி, தரதரவென அழைத்து சென்று வீட்டில் விடுகிறார் பாண்டியன். அங்கு வானதியின் பெற்றோர் வாசலிலேயே காத்திருக்கிறார்கள். இதன்பின்னர் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
நிகிலுக்கு வீடு... சூப்பர் சிங்கர் பைனலில் வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன? முழு விவரம் இதோ
Related Stories
Recommended image1
பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved