- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் அவருடன் பெங்களூருக்கு கிளம்பி சென்றுள்ள வானதியால் புது பிரச்சனை வெடித்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் சோழனை வெறுப்பேற்றும் விதமாக நடந்துகொள்ளும் ராகவ், நிலா என்னோட ஆளு என்று சொல்லியதால் கடும் கோபத்தில் இருக்கிறார் சோழன். இதையடுத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டைபோட்டுவிட்டு சவாரிக்கு கிளம்பிச் செல்லும் சோழன், வாட்ஸ் அப்பில் ராகவ்வின் ஸ்டேட்டஸ் பார்த்து மேலும் அதிர்ச்சியடைகிறார். அதில் நிலாவுக்கு கிஃப்ட் கொடுக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார் ராகவ். இதனால் சோழனுக்கு மேலும் சந்தேகம் அதிகரிக்கிறது. நிலாவும் ராகவ்வை லவ் பண்ணுவதாக நினைத்துக் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியனின் பிளான்
சோழன், ராகவ்வின் ஸ்டேட்டஸை பார்த்து டென்ஷனாக இருக்க, மறுபுறம் பாண்டியன் பெங்களூரு செல்வதற்காக தன்னுடைய நண்பனிடம் இருந்து கார் வாங்கி வந்திருக்கிறார். பெங்களூருவில் கடைக்கு தேவையான பொருட்கள் நிறைய வாங்க வேண்டி இருப்பதால், அதை பஸ்ஸில் கொண்டு வர முடியாது என்பதால் காரில் சென்றால் ஈஸியாக எல்லா பொருட்களையும் கொண்டு வந்துவிடலாம் என்கிற பிளானில் கார் எடுத்து வந்திருக்கிறார் பாண்டியன்.
பெங்களூருக்கு கிளம்பிய வானதி
அவர் பெங்களூருக்கு கிளம்புவது தெரிந்த வானதி, நானும் உன்கூடையே காரில் வருகிறேன் என சொல்லி ஏறி உட்கார்ந்து கொள்கிறார். பாண்டியன் வேண்டாம் என சொல்லியும் கேட்காத வானதி, நான் வருவேன் என அடம்பிடிக்கிறார். இதனால் பாண்டியனும் வேறு வழியின்றி வானதியை பெங்களூருக்கு அழைத்துச் செல்கிறார். மறுபுறம் சோழன் மதுரைக்கு இரவெல்லாம் கண்விழித்து கார் ஓட்டிச் சென்றதால் மிகவும் டயர்டாக வந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்.
கடும் அப்செட்டில் சோழன்
அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு பிரியாணி வாங்கி வரும் நடேசன், சோழன் டயர்டாக இருப்பதை பார்த்து அவருக்கும் கொஞ்சம் பிரியாணி கொடுக்கிறார். அப்போது சோழன் புலம்பத் தொடங்குகிறார். இதையெல்லாம் கேட்க முடியாது என நடேசன் கிளம்பிச் சென்றுவிடுகிறார். அந்த நேரம் பார்த்து சோழனின் ஓனர் அவருக்கு போன் போடுகிறார். என்னவென்று கேட்கும் சோழனிடம் ட்ரிப் ஒன்று இருப்பதாக சொல்கிறார். ஆனால் சோழன் முடியவே முடியாது என கூறிவிடுகிறார். நான் இப்போ தான் வந்து உட்கார்ந்திருக்கேன், அதுக்குள்ள இன்னொரு ட்ரிப்பா என கேட்கிறார். அதற்கு அந்த ஓனர், ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போ என சொல்கிறார். ஆனால் சோழன் முடியவே முடியாது என சொல்லிவிடுகிறார்.
குடைச்சல் கொடுக்கும் வானதி
மறுபுறம் வானதியை பெங்களூருக்கு அழைத்துச் சென்ற பாண்டியன், அங்கு தன் கடைக்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்குகிறார். லேட் ஆவதால், சீக்கிரம் கிளம்பலாம் என சொல்கிறார் வானதி. நான் தான் அப்பவே சொன்னேன்ல என கூறும் பாண்டியன், நம்ம என்ன ட்ரிப்புக்கா வந்திருக்கோம், பொருள் வாங்க தான் வந்திருக்கோம். நீ இப்பவே போகணும்னு சொல்ற, நான் இன்னும் நிறைய இடத்துக்கு போக வேண்டியதிருக்கு. நம்ம கிளம்புவதற்கு கண்டிப்பா நைட் 7 மணி ஆகும் என சொல்கிறார் பாண்டியன். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் வானதி. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

