MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் உடன் பெங்களூருக்கு சென்ற விஷயம் தெரியாத வானதியின் பெற்றோருக்கு மகள் மீது சந்தேகம் வருகிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 02 2026, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் ராகவ் நிலாவுக்கு கிஃப்ட் கொடுத்த போட்டோவை ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை பார்த்து டென்ஷன் ஆன சோழனுக்கு அவர்கள் இருவருமே காதலிக்கிறார்களோ என்கிற சந்தேகமும் வருகிறது. மறுபுறம் பாண்டியனுடன் பெங்களூருவுக்கு அடம்பிடித்து கிளம்பிச் சென்ற வானதி, தான் சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என நச்சரிக்க, அதனால் கடும் கோபமடைகிறார் பாண்டியன். தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை வாங்க வந்த இடத்தில் வானதி இப்படி செய்வதால் பாண்டியன் டென்ஷன் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
பாதியில் திரும்பும் பாண்டியன்
Image Credit : jiohotstar

பாதியில் திரும்பும் பாண்டியன்

பாண்டியன் கோபமடைந்ததால், அவரை கூல்டவுன் பண்ணும் விதமாக பேசும் வானதி, எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் உன் கூடவே இருக்கேன் என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு தன்னுடைய ஷாப்பிங்கை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்புகிறார் பாண்டியன். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிலா ஆபிஸில் தன்னுடைய தோழி உடன் டீ குடித்துக் கொண்டிருக்க, அங்கு வரும் ராகவ் நிலாவை பார்க்கிறார். அப்போது தான் பரிசாக கொடுத்த வாட்சை நிலா கட்டிவராததை நோட் பண்ணிய ராகவ், அதை ஏன் கட்டவில்லை என கேட்பதோடு, அதோட ரேட் 30 ஆயிரம் என சொல்கிறார்.

Related Articles

Related image1
அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
Related image2
தப்பு கணக்கு போடும் சோழன்... நிலாவை திட்டித்தீர்த்த ராகவ் - அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
35
சோழன் கொடுத்த வாட்சை பெருமையாக பேசும் நிலா
Image Credit : jiohotstar

சோழன் கொடுத்த வாட்சை பெருமையாக பேசும் நிலா

அதற்கு நிலா, நான் எதாச்சும் பங்க்‌ஷன் வந்தால் அப்போது மட்டும் கட்டிக் கொள்கிறேன் என சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் இப்போ கட்டியிருக்கும் வாட்சும் எனக்கு கிஃப்டாக வந்தது தான், இதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் என சொல்கிறார். சோழன் கொடுத்த வாட்ச் பற்றி பேசுகையில் சோழன் நியாபகம் வந்ததால் அவருக்கு போன் போட்டு பேசுகிறார் நிலா. அவர் போன்போட்டால் எப்பவும் வழிஞ்சு வழிஞ்சு பேசும் சோழன், தற்போது சிடு சிடுவென பேசுகிறார். இதனால் நிலாவும் குழம்புகிறார். எதற்காக சோழன் இப்படி பேசுகிறார் என்கிற குழப்பத்திலேயே இருக்கிறார் சோழன்.

45
வானதியை வலைவீசி தேடும் பெற்றோர்
Image Credit : jiohotstar

வானதியை வலைவீசி தேடும் பெற்றோர்

வானதி பெங்களூருக்கு சென்றது தெரியாமல் அவரது வீட்டார், நைட்டாகியும் மகள் வீட்டுக்கு வராததால் என்ன ஆச்சோ என பதறிப்போய் இருக்கிறார்கள். போன் போட்டால் ஸ்விட் ஆஃப் என வருகிறது. இதனால் அவர் பாண்டியனோடு ஓடிப்போய் விட்டாரா என சந்தேகப்படுகிறார்கள். மறுபுறம் சோழன் வீட்டில் டீ போட்டுக்கொண்டிருக்க, அங்கு வரும் நிலா என்ன பண்றீங்க என கேட்க, அதற்கு அவர், தலைவலிப்பதால் டீ போடுகிறேன் என சொல்கிறார். நிலாவை விடாது கருப்பாய் துரத்தும் ராகவ், இரவு நேரத்திலும் நிலாவுக்கு மெசேஜ் மற்றும் போட்டோக்களை அனுப்பி தொந்தரவு செய்கிறார்.

55
நிலாவிடம் கறார் காட்டும் சோழன்
Image Credit : jiohotstar

நிலாவிடம் கறார் காட்டும் சோழன்

ராகவ் பற்றி சோழனிடம் நிலா பேச வர, அந்த பேச்சை எடுத்ததும் சோழன் கத்த ஆரம்பிக்கிறார். இதனால் எதற்காக சோழன் இப்படி இருக்கிறார் என தெரியாமல் ரூமுக்குள் சென்று ஃபீல் பண்ணுகிறார் நிலா, மறுபுறம் வானதியை தேடி அவருடைய அண்ணன் பாண்டியனின் கடைக்கு வருகிறார். அங்கிருக்கு வேலையாளிடம் வானதி பற்றி அவர் விசாரிக்க, முதலில் மழுப்பலான பதில் சொல்லும் அந்த நபர், பின்னர் வானதி, பாண்டியனுடன் பெங்களூருக்கு சென்ற விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image2
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Related Stories
Recommended image1
அடங்காப்பிடாரி வானதியால் பாண்டியனுக்கு காத்திருக்கும் சிக்கல் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image2
தப்பு கணக்கு போடும் சோழன்... நிலாவை திட்டித்தீர்த்த ராகவ் - அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved