MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மீனா தங்கமயில் பேசுவதை பார்த்து ஷாக்கான ராஜீ – உண்மை தெரிந்து சாமிகிட்ட வேண்டிக் கொள்ளும் தங்கை!

மீனா தங்கமயில் பேசுவதை பார்த்து ஷாக்கான ராஜீ – உண்மை தெரிந்து சாமிகிட்ட வேண்டிக் கொள்ளும் தங்கை!

Pandian Stores 2 Serial Today 747th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 747ஆவது எபிசோடில் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்து ராஜீ அதிர்ச்சி அடைந்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 23 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial Today Episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், மீனா மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்ததை ராஜீ நேராக பார்த்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ராஜீ, அங்கிருந்து பேசாமல் நடந்தார்.

25
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial Today Episode

ராஜீயை பார்த்த மீனா அவரை தடுத்து நிறுத்தினார். அப்போது கோபம் கொண்ட ராஜீ அவர்கள் உடன் உங்களால் எப்படி பேச முடியும். ஓ, உங்களை புகாரில் சேர்க்கவில்லை என்று அவர்களுடன் பழக ஆரம்பித்துவிட்டீர்களா? எல்லோர் மீதும் போலீசில் புகார் கொடுத்து ஸ்டேஷனில் உட்கார வைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நீங்கள் எப்படி பேசலாம் என்று கோபத்தில் பேசினார்.

வெந்து தணிந்தது காடு... சீட் தரலனா தீக்குளிப்பேன் பாரு!" - அதிரடி முடிவில் கூல் சுரேஷ்

35
Raji Shocking Movements
Image Credit : Jio Hot Star

Raji Shocking Movements

இதைத் தொடர்ந்து ராஜியை சமாதானப்படுத்திய மீனா அவருடன் தங்கமயில் வேலை பார்க்கும் வீட்டிற்கு வந்தார். இதைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் இப்போது வரை என்ன நடந்தது என்பது பற்றி பிளாஷ்பேக்காக எல்லா கதைகளையும் மீனாவும், தங்கமயிலும் பகிர்ந்து கொண்டனர். அப்போது இவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், இனிமேலும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியுமா என்றால் என்னால் கொடுக்க முடியாது. ஆனால், உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்காகவும் கடவுள்கிட்ட வேண்டி கொள்கிறேன். அதை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் என்றார்.

45
ராஜீ மற்றும் மீனா
Image Credit : Jio Hot Star

ராஜீ மற்றும் மீனா

அதை நான் கண்டிப்பாக செய்வேன் என்றார். அப்போது பேசிய தங்கமயில் இதைப் பற்றி யாரிடமும் நீ சொல்ல வேண்டாம். உன்னுடைய கணவர் கதிர் தம்பிக்கிட்ட கூட சொல்லக் கூடாது என்றார். அதன் பிறகு ராஜீ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடைசியாக கதிர் மற்றும் ராஜீ இருவரும் டீ கடைக்கு சென்றனர். அப்போது மீனாவிற்கு போன் போட்ட ராஜீ நான் கதிருடன் இருக்கிறேன். அவரிடம் சொல்லவா என்று கேட்டார். அதற்கு மீனா அப்படி எதுவும் சொல்லிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தேர்தல் நேரத்தில் துரந்தர் 2 வெளியீடு சர்ச்சை – உயர்நீதிமன்றத்தில் அவசர மனு

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 747ஆவது எபிசோடு
Image Credit : Jio Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 747ஆவது எபிசோடு

இறுதியாக கதிர் மற்றும் ராஜீ இருவரும் டீக்கடையில் இருப்பதை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு வந்த முத்துவேல் தனது மகளிடம் சென்று பேசினார். கோச்சிங் கிளாஸ் போறது பற்றியும், டிராவல்ஸ் பிஸினஸ் எப்படி போகிறது என்பது பற்றியும் கேட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் நடந்த சண்டையையும் பற்றி விசாரிக்க, டிராவல்ஸ் வைக்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று சொல்லவே, ஆமாம், அவர் கேட்கிறார். எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்க வேண்டும். நான் கொடுத்துவிடுகிறேன். எப்படியிருந்தாலும் கொடுக்க வேண்டியது தான். அதற்காக உங்களிடமிருந்து வாங்கி கொடுத்தாலும் அதனை அவர் வாங்கிக் கொள்ளமாட்டார் என்றார். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு முத்துவேல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 747ஆவது எபிசோடு முடிந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
மீனாவிடம் சிக்கிய டுபாக்கூர் சாமியார்... விஜயாவிடம் சவால்விட்ட முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved