MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெந்து தணிந்தது காடு... சீட் தரலனா தீக்குளிப்பேன் பாரு!" - அதிரடி முடிவில் கூல் சுரேஷ்

வெந்து தணிந்தது காடு... சீட் தரலனா தீக்குளிப்பேன் பாரு!" - அதிரடி முடிவில் கூல் சுரேஷ்

Cool Suresh Political Speech: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் தீக்குளிப்பேன் என நடிகர் கூல் சுரேஷ் மிரட்டல் விடுத்துள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 23 2026, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Cool Suresh Political Speech
Image Credit : Google

Cool Suresh Political Speech

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் கூல் சுரேஷ், தனித்துவமான பேச்சு பாணியால் ரசிகர்களிடையே பிரபலமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் மேலும் மக்கள் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருக்கும் அவர், புதிய படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் வித்தியாசமான ரியாக்ஷன்கள் கொடுத்து அடிக்கடி வைரலாகி வருகிறார்.

24
Mansoor Ali Khan
Image Credit : X

Mansoor Ali Khan

காமெடி கலந்த கூர்மையான கருத்துகளை பகிரும் கூல் சுரேஷ், அரசியல் மற்றும் சமூக விஷயங்களிலும் தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

34
Cool Suresh emotional speech about politics
Image Credit : our own

Cool Suresh emotional speech about politics

அந்த நிகழ்ச்சியில் கூறியதாவது, “மன்சூர் அலிகான் அண்ணனுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட வேண்டும். 2026 தேர்தலில் அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன். இது அந்த தொகுதி மக்களுக்கே இழப்பாகும்” என்று வலியுறுத்தினார். மேலும் “நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி உள்ளது. சிலர் அவரது ஆதரவை பாராட்ட, மற்றவர்கள் இது தேவையற்ற அதிரடி பேச்சு என விமர்சித்து வருகின்றனர்.

44
Actor Cool Suresh demanding election seat
Image Credit : Google

Actor Cool Suresh demanding election seat

தமிழகத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே பல கட்சிகளில் இருந்தும் சர்ச்சைகளில் சிக்கிய மன்சூர் அலிகானை சுற்றி இந்த பேச்சு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மொத்தத்தில், கூல் சுரேஷின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றம்
தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே பாடலில் ஒரு வார்த்தையை 238 முறை பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் - அது எந்த பாட்டு தெரியுமா?
Recommended image2
ரஜினி பட லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய யூத்... 4 நாட்களில் இம்புட்டு கலெக்‌ஷனா?
Recommended image3
ஹாப்பி ராஜ் முதல் காட்டான் வரை... மார்ச் 27ந் தேதி தியேட்டர் & OTT-ல் செம விருந்து வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved