- Home
- Cinema
- தொலைக்காட்சி
- யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியா இருக்கும் மீனா – தனிக்குடித்தனம் முடியவே முடியாது!
யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியா இருக்கும் மீனா – தனிக்குடித்தனம் முடியவே முடியாது!
Meena Stands Firm in Pandian Stores 2 : யார் என்ன சொன்னாலும் மீனா மட்டும் தனது விருப்பத்தில் விடாப்பிடியாக இருக்கிறார். மேலும், உள்ளூராக இருந்தாலும் கூட முடியவே முடியாது என்று கூறிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா மட்டும் தான் இப்போது பாசமழை பொழிகிறார். பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் தான் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் 2ஆவது மகன் தான் இப்போது தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். முதலில் மீனா தான் அரசு வேலை பார்த்துவந்தார். இப்போது லஞ்சம் கொடுத்து செந்திலும் அரசு வேலை பெற்றுள்ளார்.
Anna Serial: வைஜெயந்திக்கு ஆப்பு ; சாட்சி சொல்ல வந்த முருகன் சிலை - அண்ணா சீரியல் அப்டேட்!
மீனாவிற்கு அரசு வேலை
அரசு வேலை பார்க்கும் மீனாவிற்கு அரசு குடியிருப்பு ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், மீனா அதை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். எனக்கு அரசு குடியிருப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதை பற்றி முதலில் மீனா மற்றும் செந்தில் இருவரும் தான் டிஸ்கஸ் செய்தனர். அதன் பிறகு மீனா அரசு குடியிருப்பு வேண்டாம் என்று சொல்ல அதை பற்றி செந்தில் தனது மாமனாரிடம் சென்று கூறியுள்ளார்.
செந்தில் அண்ட் மீனா பிளான்
மேலும், இது குறித்து மீனாவிடம் பேச வேண்டும் என்று செந்தில் கூறியிருக்கிறார். என்னுடைய வீட்டில் நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் முதலில் மீனாவிடம் பேசி சம்மதிக்க வையுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், மீனாவின் அப்பாவும் இதைப் பற்றி பேச அவர் முடியாது என்று கூறிவிட்டார். மேலும் இந்த விஷயத்தை பற்றி தனது அப்பாவிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா, செந்திலுக்கு போன் போட்டு அவரை சரமாரியாக திட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய 598ஆவது எபிசோடு
இந்த நிலையில் தான் இன்றைய 598ஆவது எபிசோடில் செந்தில், மீனா, கதிர் மற்றும் ராஜீ ஆகியோர் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கும் போது செந்தில் தனிக்குடித்தனம் போவது பற்றியும் மீனாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரசு குடியிருப்பு பற்றியும் பேசியுள்ளார். இதைக் கேட்ட ராஜீ கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனால், கதிர் நல்ல விஷயம் தானே அப்படியே தனிக்குடித்தனம் போங்க என்று சொல்ல, அதில் எனக்கு விருப்பமில்லை என்று மீனா கூறிவிட்டார்.
குடும்பங்களுடன் ஒன்றாக வாழ வேண்டும்
எனக்கு எப்போதும் குடும்பங்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட செந்திலுக்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது. இன்னும் செந்திலின் தனிக்குடித்தம் திட்டம் பற்றி அவருடைய அப்பா பாண்டியனுக்கும் சரி, அம்மா கோமதிக்கும் சரி தெரியவில்லை. அப்படி தெரியவரும் போது அவர்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது பற்றி பொறுத்திருந்து பார்ககலாம்.