- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மொத்த கடையையும் ஆட்டைய போட பிளான் – அப்பாவை தொடர்ந்து கல்லாவில் உட்கார்ந்த தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
மொத்த கடையையும் ஆட்டைய போட பிளான் – அப்பாவை தொடர்ந்து கல்லாவில் உட்கார்ந்த தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Thangamayil Come To Pandian Stores to Work : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 598ஆவது எபிசோடானது, பாண்டியனின் காட்சிகளுடன் தொடங்கி கடையாக தங்கமயில் கல்லாவில் உட்காரும் காட்சிகளுடன் முடிவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. செந்திலுக்கு அரசு வேலை செட்டான நிலையில், கதிருக்கு பாண்டியன் டிராவல்ஸ் பிக்கப்பாகி வருகிறது. ஆனால், தனக்கு ஒரு நிலையான வேலையிலிருந்த சரவணன், தனது வேலையை விட்டு இப்போது அப்பா கடையில் வேலை பார்க்கிறார்.
'குக் வித் கோமாளி 6' நிகழ்ச்சியில் KPY சரத்துக்கு நடந்த அவமரியாதை - அதிர்ச்சி பதிவு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
ஆனால், தங்களுக்கு இந்த கடை தான் நிலைக்கும் என்று சரவணனின் மாமனாரும் சரி, மாமியாரும் சரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையே சொல்லி சொல்லி தங்கமயிலை உசுப்பேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த வார எபிசோடுகளில் தங்கமயிலின் அப்பா கடைக்கு வேலை வந்து சும்மா இருக்காமல் கடையில் ஜூஸ் எடுத்து குடிப்பது, வேர்க்கடலை சாப்பிடுவது என்று இருந்து கடையில் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து ரூ.500ஐ ஆட்டைய போட்டார். அதோடு, கடையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை ஆட்டைய போட்டு சென்றார்.
அட்ராசக்க ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகும் சன்னி லியோன்..!
மளிகை பொருட்களை எடுத்துச் சென்ற மாணிக்கம்
ஆனால், அவர் வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் கொடுத்தாரா? அப்படி கொடுக்கும் போது பாக்கியம் என்ன சொன்னார் என்பது குறித்த காட்சிகள் இல்லை. இது முழுக்க முழுக்க சரவணன், தங்கமயில் மற்றும் மாணிக்கம் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் என்பதால், இந்த காட்சியில் பாக்கியம் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், ஏற்கனவே தனது மாமனார் கடையில் வேலை பார்ப்பது சரவணனுக்கு பிடிக்காத நிலையில் ஆரம்பத்திலேயே உன்னுடைய அப்பாவை கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடு என்று சரவணன் மயிலிடம் கூறியிருந்தார்.
மாணிக்கம் மற்றும் தங்கமயில்
இதைப் பற்றி தனது அம்மாவிடம் சொல்ல சென்ற தங்கமயிலுக்கு அங்கு நடந்த சம்பவம் காரணமாக அவர் அதைப் பற்றி சொல்லவே இல்லை. மேலும், பாக்கியம் இப்போது தான் உன்னுடைய அப்பா வேலைக்கு சென்றிருக்கிறார். இனி நான் கடன் எல்லாவற்றையும் அடைத்துவிடுவேன் என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டார். இந்த சூழலில் தான் சரணன் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் சண்டை போட்டார்.
மனைவியிடம் சண்டை போட்ட சரவணன்
அதில், ஏய், உன்னிடம் உன்னுடைய அப்பாவை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல் அப்படின்னு தான் சொன்னேன். அப்புறம் எதுக்கு வந்தார். தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணுறார். ஓ, நைட் நைட்டு உங்க வீட்டுல நடப்பது எல்லாம் பேச மாட்டீங்க. ஆனால், எங்க வீட்டுல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு பேசிக் கிட்டே இருப்பீங்க. ஏய் உன்னுடைய அப்பாவை கடைக்கு வரக் கூடாது என்று சொன்னீயா இல்லையா? என்னது அந்த ஆளு வெகுளியா? வெகுளி தான் என்னுடைய அப்பா வெளியில் சென்ற போது கடையில் கல்லாவில் உட்காருவாரா? என்னமோ கடை முதலாளி மாதிரி கல்லாவில் உட்காருகிறார்.
கல்லாவில் உட்கார்ந்த மயில்
உட்கார்ந்தவர் சும்மா உட்கார்ந்தாரோ இல்லை கடை பணத்தை திருடினாரோ? ஓ திருடுற பழக்கம் இல்லாமல் பொய் சொல்லுற பழக்கம் மட்டும் தான் உங்களிடம் இருக்கு. வேலைக்கு வந்த இடத்துல வீட்டுக்கு தேவையான மொத்த மளிகை சாமான்களை நம்ம கடையிலிருந்து மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டு போகிறார். ஏன், அந்த ஆளுக்கு வெட்கமே கிடையாதா? என்ன ஜெனமம் அந்த ஆளு.
இனிமேல் அப்பா கடைக்கு வரமாட்டார்
இதற்கு பதிலளித்த மயில் சரி, இருக்கட்டும் என்னுடைய அப்பா யாரோ ஒருத்தரோட கடையிலிருந்த எடுக்கலேல. நம்ம கடையில் தான் எடுத்தாரு. ஏதோ உரிமையில் எடுத்திருப்பார். பொண்ண கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்ற உரிமையில் எடுத்திருக்கிறோம். இப்படி பேசுவீங்க என்று அவருக்கு என்ன தெரியும். அவர் நல்லவராக இருந்து அப்படி செய்திருந்தால் நானே மன்னித்துவிடுவேன். எல்லா தில்லாலங்கடி வேலையும் பண்ணிட்டு எப்படி தெனாவட்டா இதெல்லாம் பண்ண முடியுது. சரி, இன்மேல் என்னுடைய அப்பாவை கடையில் பச்ச தண்ணீர் கூட குடிக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன் என்றார். அதோடு அந்த காட்சிகள் முடிகிறது.