'குக் வித் கோமாளி 6' நிகழ்ச்சியில் KPY சரத்துக்கு நடந்த அவமரியாதை - அதிர்ச்சி பதிவு!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சியளிக்கும் விதமாக KPY சரத் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

குக் வித் கோமாளி 6:
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 6 நிகழ்ச்சி' இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வென்ற, ராஜு தான் 'குக் வித் கோமாளி சீசன் 6' போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹை லைட்டே சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாக கொண்டு செல்வது தான்.
மாறாத கோமாளிகள்:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், குக்குகள் ஒவ்வொரு சீசனிலும் மாறினாலும், கோமாளிகள் தற்போது வரை மாறவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை போன்றோர் அடுத்த லெவலுக்கு சென்று விட்டனர். குறிப்பாக பாலா தற்போது, திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
KPY சரத் அதிர்ச்சி பதிவு:
ஆனால் சுனிதா, KPY சரத் போன்றோர் கடந்த 6 சீசனாக கோமாளிகளாகவே இருந்து வருகிறார்கள். கடந்த 6 சீசனாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த, KPY சரத் அதிர்ச்சிதரும் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
குக் வித் கோமாளியை விட்டு விலகுகிறாரா?
அந்த பதிவில், 'கும் வித் கோமாளி' சீசன் 6 என பதிவிட்டு மதியாதோர் வாசல் மிதியாதே என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு எதோ அவமரியாதை நடந்துள்ளதை தொடர்ந்து இப்படி ஒரு பதிவு போட்டுள்ளார் என தெரிகிறது. அதே போல் அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.