- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பால் காய்ச்ச ரூ.2500 கூட இல்ல; மீனாவிடம் கெஞ்சிய செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
பால் காய்ச்ச ரூ.2500 கூட இல்ல; மீனாவிடம் கெஞ்சிய செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Senthil asks Meena for money in Pandian Stores 2 : தனிக்குடித்தனம் செல்லும் நிலையில் பால் காய்ச்ச ரூ.2500 கூட இல்லாமல் நடு ராத்திரியில் மீனாவை எழுப்பி வாங்கிக் கட்டிக் கொண்ட செந்தில் தொடர்பான எபிசோடு இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்ல என்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் 605 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் 606ஆவது எபிசோடு இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மீனாவின் உதவியை நாடிய செந்தில்
இதில், தனிக்குடித்தனம் செல்வதற்கு விடாப்பிடியாக இருக்கும் செந்தில் தொடர்பான காட்சிகள் பரபரப்பாக சென்றது. மீனாவிற்கு கொடுக்கப்பட்ட அரசு விடுதிக்கு செந்தில் தனிக்குடித்தனம் செல்கிறார். இதற்காக மாமனார் வீட்டிலிருந்து தனிக்குடித்தனம் செல்ல தேவையான பொருட்கள் தருவதாக கூறியிருந்த நிலையில் செந்திலின் அம்மா கோமதியும் தன் பங்கிற்கு பாத்திரம் உள்பட எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டு தலைக்கு காத்திருக்கும் ராஜ மரியாதை... கேப்டன்சி டாஸ்க் ஜெயிச்சா இவ்வளவு சலுகைகளா?
செந்தில் மற்றும் மீனா
அப்போது மீனா வரவே அவரிடம் சொல்லிவிட்டார். மீனாவைக் கண்டதும் ராஜீ அழ ஆரம்பித்துவிட்டார். இதற்கு காரணம், ராஜீ கதிரை திருமணம் செய்வதற்கு முன்னதாக இருந்து இருவரும் நன்றாக பேசி அக்கா தங்கை போன்று பழகியிருந்தனர். இதனால் மீனா தனியாக செல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் ராஜீ அழுதார். இதே போன்று அரசியும் அழவே தனது அப்பாவிடம் போக வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.
ரேவதி கர்ப்பமா? உண்மையை அறிந்து கார்த்திக் எடுக்கும் முடிவு - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
பால் காய்ச்சும் விழா
இதைத் தொடர்ந்து தனிக்குடித்தனம் செல்லும் ஆர்வத்திலும், உற்சாகத்திலும் செம குஷி மோடில் இருக்கும் செந்தில் எத்தனை பேர் வருவார்கள், அவர்களுக்கு டிபன், சாப்பாடு என்று எல்லாம் வாங்க வேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும், என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். இதில் மாலை, பாய், சேர் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுக் கொண்டே போனது. அதுமட்டுமில்லாமல் தன்னிடம் ரூ.200 தான் இருந்தது. இதை வைத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் தூங்கிக் கொண்டிருந்த மீனாவை தட்டி எழுப்பினார். அவரும், என்னங்க என்று கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து கண் விழுத்தார்.
பால் காய்ச்ச ரூ.2500 செலவு
அப்போது நாளைக்கு பால் காய்ச்சனும், 25 பேர் கிட்ட வருவாங்க. அவங்களுக்கு டிபன் ரெடி பண்ணனும். அப்படி இப்படி என்று பேச, அதற்கு மீனா ஆமா வருவாங்க, ரெடி பண்ணனும், பண்ணுங்க, அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் விருப்பம் இல்லாமல் தான் அங்கு வருகிறேன் என்று பேசிவிட்டு டென்ஷனாகி மறுபடியும் தூங்கிவிட்டார். மீனா பேசியதையெல்லாம் கேட்டு செந்தில் அதிர்ச்சி அடைந்தார். காசுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்து நின்றார்.
நல்ல வேளை... பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகையின் ஷாக்கிங் பதிவு!