ரேவதி கர்ப்பமா? உண்மையை அறிந்து கார்த்திக் எடுக்கும் முடிவு - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2: கார்த்திகை தீபம் 2 சீரியலில், நேற்றைய தினம் தீபாவதி கார்த்தி குறித்த விசாரணையை தொடங்கிய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

மருத்துவமனைக்கு வரும் ரேவதி:
கார்த்தியுடன், மருத்துவமனைக்கு வந்த ரேவதியை செக் செய்த மருத்துவர்... மாயா சுட்டதில் ஏற்பட்ட குண்டடி காயங்கள் நல்லவிதமாக சரியாகி வருவதாக கூறுகிறார். இதை கேட்டு ரேவதி சந்தோஷப்பட, மருத்துவர் இதற்கெல்லாம் காரணம் அவங்களை நல்லபடியா பார்த்துக்கிட்டது தான் என சொல்கிறார்.
தோழியுடன் திடீர் சந்திப்பு:
உடனே ரேவதி புன்னகை பூத்த முகத்தோடு, ஆமாம் டாக்டர் என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து ரேவதியின் தோழி ஒருவள் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். ரேவதியை பார்த்ததும், இங்க என்னடி பண்ற என்று கேட்கிறாள்.
3 மாதம் கர்ப்பமா?
அதற்க்கு ரேவதி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கான பரிசோதனைக்கு வந்ததாக சொல்ல கார்த்திக் இதை கேட்டு ஷாக்காகி எதுக்கு இப்படி சொன்ன என்று கூச்சத்தோடு கேட்க, நிஜத்தில் தான் நடக்கல, பேச்சுக்காவது இப்படி சொல்றேன் என்று ரேவதி குறும்புத்தனமான மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துகிறாள்.
கார்த்திக்கு தெரியவரும் உண்மை:
அடுத்து கார்த்திக் ரேவதியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவள் எனக்கு எதாவது சாப்பிடணும் போல் இருக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ என்று அடம் பிடிக்கிறாள். பிறகு இவர்கள் ஹோட்டலுக்கு செல்ல அங்கு சாமுண்டீஸ்வரியும் தீபாவதியும் பேசி கொண்டிருப்பதை கார்த்திக் கவனிக்கிறான்.
கார்த்திக் எடுக்கும் திடீர் முடிவு:
மேலும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபாவதி ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் என்ற விஷயத்தை சொல்ல... கார்த்திக் மண்டையில் இப்போது தான் மணி அடிக்குது. அப்போ சாமுண்டீஸ்வரிக்கு தன் மீது சந்தேகப்படுவதாக புரிந்து கொள்கிறான், இரவு நேரத்தில் ரேவதி, ராஜராஜன், பாட்டி பரமேஸ்வரி ஆகியோரை அழைத்து சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்லி விட போவதாக சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் 2 சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாருங்கள்.