- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குமரனுடன் ஜோடியாக சென்று சிக்கிய அரசி; சுகன்யாவிடம் அசிங்கப்பட்ட பழனி! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அப்டேட்!
குமரனுடன் ஜோடியாக சென்று சிக்கிய அரசி; சுகன்யாவிடம் அசிங்கப்பட்ட பழனி! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அப்டேட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடில் அரசியின் காதல் காட்சிகளும், சுகன்யா மற்றும் பழனிவேலுவின் ஆக்ஷன் காட்சிகளும் ஒளிபரப்பாகி உள்ளது.

Pandian Stores
'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2' சீரியலில் நேற்றைய எபிசோடில், பழனியும் - சுகன்யாவும் படத்திற்கு செல்ல முடிவெடுத்த நிலையில் கையில் காசு இல்லை என்றால் என்ன நடக்குமோ என்கிற பதற்றத்துடன் பழனி இருக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய பரபரப்பான எபிசோட்
இன்றைய தினம், அரசி மற்றும் குமரவேலுவின் காதல் காட்சிகளுடன் தொடங்குகிறது. கடந்த சில எபிசோடுகளாக இவர்கள் இருவரும் இடம் பெறும் எந்த காட்சிகளும் இல்லாத நிலையில் இன்றைய எபிசோடில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி ரோட்டிலேயே பேசிக்கிட்டு இருக்கிறது? ஒருநாள் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம் போயிட்டு ஹோட்டலில் சாப்பிட்டு, சினிமாவுக்கு போகலாம் என கூற அரசி பயந்து போகிறார்.
தங்கமயிலுக்கு கிடைத்த டிப்ஸ்; பழனிவேலுக்கு பாண்டியன் வெச்ச ஆப்பு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
அரசியை திருச்சிக்கு அழைக்கும் குமரவேல்
பின்னர் அரசியை பார்த்து ஏன் பயந்துக்கிட்டே இருக்க என்று குமரவேல் கேட்கிறார். அரசியோ போன் பேசுறதுக்கே என்னுடைய அம்மா கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. இதுல திருச்சி வேறயா? அப்படியே காவிரி ஆத்துல தள்ளி விட்டுருங்க. ஊருக்குள்ள யாருக்கும் தெரியாமல் பேசுறதுக்கே உயிரு போகுது. இதில் எப்படி திருச்சி போக முடியும் என கேட்கிறார்.
சுகன்யா கண்ணில் சிக்கிய அரசி மற்றும் குமரன்
இதை தொடர்ந்து மணி 5 ஆச்சா, வீட்டுக்கு போகணும் என்று அரசி அடம்பிடிக்க, குமரவேல் அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் இளநீர் எல்லாம் வாங்கி கொடுக்கிறார். அப்போது படத்திற்கு சென்ற சுகன்யா இவர்களை பார்த்துவிடுகிறார். அவர் பெரிதாக ரியாக்ஷன் கொடுக்கவில்லை. ஏற்கனவே அவர்களது காதலுக்கு சப்போர்ட் பண்ணுவதால் எதுவும் பிரச்சனையாக மாறாது என குமரவேல் தைரியம் சொல்கிறார்.
சாதாரண அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க சொல்லும் மீனாவின் அப்பா – அதிர்ச்சியடையும் செந்தில், மீனா!
கோபத்தியிடம் திட்டு வாங்கும் அரசி
வீட்டிற்கு லேட்டா வந்த அரசியிடம் கோமதி கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். காலேஜ் 3 மணிக்கு முடிந்து 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்த. இப்போது லேட்டா வர்ற. இந்த வாரத்தில் 2ஆவது முறையாக நீ லேட்டாக வர்ற. புது பழக்கமாக போனையே யூஸ் பண்ணிட்டு இருக்க என திட்டுகிறார். வர்ற வர்ற ரொம்பவே பொய் பேசுறா என்று கொஞ்சம் ஓவராக கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். உன்னுடைய டீச்சர் நம்பர் கொடு நான் பேசுகிறேன் என கூறி அரசி பயந்துவிட... பின்னர் இனிமேல் காலேஜ் போனா சீக்கிரம் வரணும் என்று கண்டிப்பு பேசுகிறார்.
சாதாரண தியேட்டருக்கு கூட்டி வரும் பழனி
ஒரு சாதாரண தியேட்டருக்கு பழனிவேல், சுகன்யாவை கூட்டிட்டு வந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சுகன்யா, காம்ப்ளஸில் 4 பெரிய தியேட்டர் இருக்கிறது. அங்க கூட்டிட்டு போங்க, இங்க எல்லாம் என்னால் படம் பார்க்க முடியாது என்று வாக்குவாதம் செய்கிறார். காசு இல்ல என்று சொன்னதும் அவரது கோபம் இன்னும் அதிமகாகிறது. பொது இடம் என்று கூட பார்க்காமல் பழனிவேலுவிடம் சண்டைக்கு செல்கிறார். மொத்தமாக ரூ.300 தான் எடுத்து வந்தேன் என்று பழனிவேல் வரும் வழியில் வண்டிக்கு ரூ.100 பெட்ரோல் போட்டாச்சு. இந்த தியேட்டரில் ஒரு டிக்கெட் ரூ.80, 2 டிக்கெட் ரூ.160 போக மீதம் 40 இருக்கும். அதுல கூல்டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் வாங்கணும். இதுவே பெரிய தியேட்டரில் ஒரு டிக்கெட் ரூ.160 என தன்னுடைய நிலைமையை சொல்லுகிறார்.
என் பொண்டாட்டி இவங்க தான்; நடிகையுடனான கிசுகிசுக்கு பின் விஜய் டிவி சீரியல் நடிகர் போட்ட பதிவு வைரல்
பழனியை கண்டமேனிக்கு திட்டும் சுகன்யா
சுகன்யாவுக்கு ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், கைல 5 பைசா கூட இல்ல, உனக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம், உன்ன நம்பி கழுத்த நீட்டுனேலே என்ன சொல்லனும், வாயா போயா என்று சகட்டுமேனிக்கு தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார். இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் சினிமா பற்றியே யோசிக்க மாட்டேன். என்னை வீட்டிற்கு கூட்டிட்டு போங்க. கோயிலுக்கு போய் விதியை நினைத்து அழவா என்று ஆக்ரோஷமாக கத்துகிறார்.
நேரடியாக பழனியின் அண்ணன்கள் வீட்டுக்கு போய் குறைசொல்லும் சுகன்யா
நேராக பழனிவேலுவின் அண்ணன்கள் வீட்டிற்கு வந்த சுகன்யா தியேட்டர் வாசல் வரை சென்று திரும்ப வந்துவிட்டோம். டிக்கெட் இருந்தது. ஆனால், காசு தான் இல்லை. முதலில் ஒரு தியேட்டருக்கு சென்றோம். ஒரு சின்ன தியேட்டர் அங்க தான் போனோம். பிறகு வேறொரு பெரிய தியேட்டருக்கு போணோம். அங்க 2 டிக்கெட் ரூ.320. இவரிடம் ரூ.300 தான் இருந்தது. அதுலயும் ரூ.100 பெட்ரோல் போட்டு மீதம் ரூ.200 தான் இருந்தது. போஸ்டரையும், அங்க இருந்தவர்களையும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
இவருக்கு டிக்கெட் விலையை பற்றி ஒன்றும் தெரியவில்லை. பெரிதாக தியேட்டருக்கு போயிருக்க மாட்டார் என்று நினைக்கிறீங்க அப்படி என்று சுகன்யா எல்லாவற்றையும் முத்துவேல் சக்திவேலுவிடம் புட்டு புட்டு வைத்துள்ளார். நான் இன்று இங்கே இருந்துக்கிறேன். எல்லோரும் கேட்பார்கள். என்னால் அந்த வீட்டிற்கு வர முடியாது என்று அடம் பிடிக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.
சுகன்யா எடுக்கப்போகும் முடிவு என்ன?
இனி நாளைய 421ஆவது எபிசோடில் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பாண்டியனிடம் படத்திற்கு செல்ல ரூ.200 கொடுத்ததற்காக சண்டைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதோடு சுகன்யாவும் தன் பங்கு அவர்களிடம் வாக்குவாதம் செய்யலாம். இல்லையென்றால் பழனிவேலுவின் சம்பளம் பற்றி கேட்கலாம். நாள் முழுவதும் கடையில் வேலை பார்க்கிறார். அப்படியிருக்கும் அவருக்கு ரூ.200 தான் சம்பளமா? என்பது போன்ற காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது.