- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சாதாரண அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க சொல்லும் மீனாவின் அப்பா – அதிர்ச்சியடையும் செந்தில், மீனா!
சாதாரண அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க சொல்லும் மீனாவின் அப்பா – அதிர்ச்சியடையும் செந்தில், மீனா!
Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ஆவது சீசன் இன்றைய எபிசோடு தங்கமயில் ஹோட்டல் வேலையுடன் தொடங்கி மீனா மற்றும் செந்தில் ஜோடியுடன் முடிவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ஆவது சீசனில் இன்றைய 418ஆவது எபிசோடானது தங்கமயில் டேபிள் துடைக்கும் காட்சியோடு ஆரம்பமாகிறது. வருத்தத்துடன் சாப்பிட்ட எச்சில் தட்டை எடுத்து வைத்து டேபிளை கிளீன் பண்ணும் போது வருத்தத்துடன் காணப்படுகிறார். அப்போது பார்த்து அவரது அம்மா போன் செய்ய முதலில் கட் செய்த தங்கமயில் 2ஆவது முறை எடுத்து பேச ஆரம்பித்தார்.
கண்கலங்கிய தங்கமயில்
அந்த நேரம் பார்த்து ஹோட்டல் மேனேஜர் பார்த்து அவரை திட்ட, அதையெல்லாம் தங்கமயிலின் அம்மா கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக தனது கணவருக்கு போன் போட்டு வீட்டிற்கு வாங்க சம்பந்தி வீட்டிற்கு போகணும் என்று சொல்கிறார். அதன் பிறகு அடுத்த சீன் சுகன்யா படத்திற்கு செல்ல புதிதாக புடவை தேர்வு செய்கிறார். அதுவும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று தேர்வு செய்கிறார்.
என் பொண்டாட்டி இவங்க தான்; நடிகையுடனான கிசுகிசுக்கு பின் விஜய் டிவி சீரியல் நடிகர் போட்ட பதிவு வைரல்
பழனிவேலை மதிக்காத சுகன்யா
அங்கு வந்த முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் சுகன்யாவிடம் பேசிக் கொண்டிருக்க பழனிவேல் வந்து இங்கு எதற்கு வந்த சுகன்யா, வா நம்ம வீட்டிற்கு போகலாம் என்று அழைக்க, அவரோ, நான் நீங்கள் வரும் வரையில் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பழனிவேலும் கடைக்கு புறப்பட்டு சென்றுவிடுகிறார். மூன்றாவது காட்சியாக தங்கமயிலின் அப்பாவும், அம்மாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்து தனது மகள் வேலைக்கு செல்வது பற்றி விசாரிக்கிறார்கள்.
தங்கமயில் அப்பா - அம்மா கேள்விக்கு பாண்டியனின் பதிலடி
தங்களது உறவினர்கள் யாரும் பெண்களை வேலைக்கு அனுப்பமாட்டார்கள். அப்படியே அனுப்பினாலும் மருமகளின் வருமானத்தில் சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் பேசுவார்கள். அதுவும் இல்லாமல் வேலைக்கு செல்லும் இடம் ரொம்ப தூரம் வேறு. மேலும் இப்போது தான் கல்யாணம் ஆகியிருக்கு அதுக்குள்ள வேலைக்கு செல்ல வேண்டுமா? குழந்தை பிறந்த பிறகு எப்படி வேலைக்கு செல்ல முடியும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பாண்டியன் தங்கமயில் விருப்பப்பட்டு தான் இந்த வேலைக்கு சென்றிருக்கிறது. உங்களுக்கு தான் தங்கமயில் வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது என்றெல்லாம் திருப்பி கேட்க உடனே அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். கடைசியாக மீனாவும், செந்திலும் தனது அப்பாவை பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள். செந்தில் தான் படித்த சான்றிதழ் எல்லாவற்றையும் எடுத்து வந்து மீனாவின் அப்பாவிடம் காண்பிக்கிறார்.
அதிர்ச்சியில் மீனா - செந்தில்
அவர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. பிறகு எப்படி படிக்க முடியும். அப்படியே படித்தாலும் ஞாபகத்திலேயே இருக்காது. நான் வேண்டுமென்றால் ஒரு ஐடியா சொல்கிறேன். குன்றக்குடி பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகமாக ஒரு வேலை காலியாக இருக்கிறது. அந்த வேலைக்கு டிரை பண்ணுங்கள். தேர்வு கிடையாது, என்ன ஒர் 10 லட்சம் கட்ட வேண்டும். குறைந்தது 4, 5 வருடத்தில் நீங்களும் அரசு வேலைக்கு படிக்கிறதுக்கும் சரியாக இருக்கும். கொடுக்கும் பணத்தையும் 5 வருடத்தில எடுத்திடலாம் என்று சொல்கிறார். இப்போது கொடுத்தால் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். என்னது 10 லட்சமா என்று மீனாவும், செந்திலும் ஒரு விதமான அதிர்ச்சியோடு கேட்கிறார்கள். அதோடு இன்றைய 418ஆவது எபிசோடும் முடிவடைகிறது.
இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீ ஜோடி தொடர்பான எந்த சீனும் இன்றைய எபிசோடில் இடம் பெறவில்லை. ராஜீ மற்றும் கதிருக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கும் போது அவர்கள் இன்றைய எபிசோடில் இல்லாதது சற்று வருத்தம் அளிக்கிறது. மேலும், கடந்த 2 எபிசோடுகளாக அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காதல் காட்சிகளும் இடம் பெறவில்லை. அவர்களது காட்சிகளும் இடம் பெறவில்லை.