- Home
- Cinema
- Pandian Stores: ராஜிக்காக பாண்டியனிடம் மோதும் கதிர்; அசிங்கப்பட்ட தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
Pandian Stores: ராஜிக்காக பாண்டியனிடம் மோதும் கதிர்; அசிங்கப்பட்ட தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எபிசோடில் தங்கமயில் வேலைக்கு செல்வது, ராஜீ போலீஸ் பயிற்சிக்கு செல்வது என்று சுவாரஸ்யமான சம்பங்கள் நடந்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 417 ஆவது எபிசோடில் மீனா மற்றும் செந்திலின் ரொமான்ஸ் காட்சிகளுடன் தொடங்குகிறது. அலுவலக வேலையை வீட்டில் வைத்து பார்க்கிறார் மீனா. இதைத் தொடர்ந்து தங்கமயில் வீட்டிலுள்ளவர்களையும், கணவர் சரவணனையும் ஏமாற்றி ஹோட்டலுக்கு வேலைக்கு செல்கிறார். தங்கமயிலை பைக்கில் ஏற்றி வந்து பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடுகிறார் சரவணன்.
ஹோட்டல் மேனேஜரிடம் அசிங்கப்படும் தங்கமயில்
அதன் பிறகு ஹோட்டலுக்கு சென்ற தங்கமயிலைப் பார்த்த ஹோட்டல் மேனேஜர், ஏம்மா ஏதும் ஃபங்கஷனுக்கு சென்று வருகிறீர்களா? என்று கேட்க, இல்லை சார் என்கிறார். அவரது உடையை பார்த்து மேனேஜர் உள்பட அனைவரும் கிண்டலாக பேசி இவரை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள். சர்வர் வேலைக்கும், கிளீனிங் வேலைக்கும் வந்த தங்கமயிலிடம் சர்வர் யூனிபார்மை கொடுத்து டேபிளை துடைக்க சொல்கிறார்கள். யூனிபார்மை அணிந்த தங்கமயில் தன்னுடைய நிலைமையை எண்ணி கண்ணீர் விட்டு அழுகிறார்.
Pandian Stores: அரசி மீது வந்த சந்தேகம்; சுகன்யா சொன்ன வார்த்தை - உள்ளே வந்த மீனா என்ன நடக்கும்?
ராஜிக்கு பக்க பலமாக இருக்கும் கதிர்
இதையடுத்து கதிர் மற்றும் ராஜீயின் காட்சிகள் காட்டப்படுகிறது. போலிஸ் வேலைக்கு பயிற்சிக்கு செல்ல ராஜீக்கு டீசர்ட் மற்றும் டிராக் பேண்ட் வாங்கி கொடுத்திருக்கிறார் கதிர். அதனை அணிந்து கொண்டு ரூமை விட்டு வெளியில் வரும் போது பாண்டியன் பார்த்துவிட, அவருடன் வாக்குவாதம் செய்கிறார். அதையும் மீறி ராஜீயை அழைத்து கொண்டு கதிர் கிரவுண்டுக்கு சென்றுவிடுகிறார். அங்கு, ராஜீயின் அப்பா முத்துவேல் தனது மகள் பயிற்சி எடுப்பதையும், மருமகன் கதிர் அவருக்கு பயிற்சி கொடுப்பதையும் பார்த்து அமைதியாக நிற்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
புரிந்து கொள்வாரா முத்துவேல்
நாளைய எபிசோடில் தனது மகள் ராஜீயை முத்துவேல் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாண்டியனுக்கும் கதிருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
Pandian Stores: கதிர் சொன்ன வார்த்தையால் கோபத்தின் உச்சத்தில் பாண்டியன்! சுகன்யா ஆசை நிறைவேறுமா?