- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores: அரசி மீது வந்த சந்தேகம்; சுகன்யா சொன்ன வார்த்தை - உள்ளே வந்த மீனா என்ன நடக்கும்?
Pandian Stores: அரசி மீது வந்த சந்தேகம்; சுகன்யா சொன்ன வார்த்தை - உள்ளே வந்த மீனா என்ன நடக்கும்?
பாண்டியன் ஸ்டோரிஸ் 2 சீரியலில், இன்றைய எபிசோடில் பெரிதாக எந்த விறுவிறுப்பும் இல்லை. ஆனால், அரசி தொடர்ந்து போனில் பேசுவது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், மார்ச் 1ஆம் தேதியான இன்றைய எபிசோடில் மீனாவின் குடும்பத்தைப் பற்றி ராஜீ கேட்பதுடன் தொடங்குகிறது. இதையடுத்து ஹாலில் இருந்து கொண்டு தொடர்ந்து அரசி போனில் பேசுவதை பார்த்து, அவரின் அம்மா கோமதிக்கு சந்தேகத்தை ஏற்படுகிறது.
வீட்டிற்கு வந்த தங்கமயிலிடம் வேலையைப் பற்றி விசாரித்த மீனா
ஹோட்டலில் சர்வர் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த தங்கமயிலிடம் வேலையைப் பற்றி மீனா, ராஜீ எல்லாரும் விசாரிக்க, என்ன சாஃப்ட்வேர் யூஸ் பண்ணுறீங்க, டேட்டா எண்ட்ரி வேலையா பார்க்குறீர்கள் என்று கேட்க அப்படியே சமாளித்துக் கொண்டு அங்கிருந்து தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.
நகை விஷயத்தில் வெளியே வந்த உண்மை - பாண்டியனிடம் ராஜீ கேட்ட கேள்வி? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
சினிமாவுக்கு கூட்டி போகாததால் கோபத்தில் சுகன்யா
படத்திற்கு கூட்டிச் செல்வதாக சொன்ன பழனிவேலுவிற்கு திரும்ப திரும்ப போன் செய்தும் எடுக்காததால் கோபமடைந்த சுகன்யா திரும்பவும் போன் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பழனிவேல் ஒருவழியாக சமாளிக்க, செந்தில் வந்து அப்பாவிடம் சொல்லி படத்துக்கு போக பெர்மிஷன் வாங்கி கொடுக்கிறார். நாளைக்கு படத்திற்கு செல்வதாக பழனிவேல் தனது மனைவி சுகன்யாவிற்கு வாக்கு கொடுத்தார். ஆனால், நாளைக்கு மட்டும் படத்திற்கு செல்லவில்லை என்றால் தனது அம்மாவிட்டிற்கு புறப்பட்டு சென்றுவிடுவதாக சுகன்யா பழனியை மிரட்டுகிறார்.
பாண்டியனுக்கு காத்திருந்த விருந்து
இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாண்டியனுக்கு விருந்து காத்திருந்தது. சுகன்யா தான் இன்று சமையல் செய்துள்ளார். மற்ற யாருமே கிச்சன் பக்கமே போகவில்லையாம். தனது தம்பிக்கு இப்படியொரு மனைவி கிடைத்திருப்பதை எண்ணி கோமதி பெருமிதம் கொண்டுள்ளார். கடைசியாக அரசி படிப்பது போன்று ஆக்ஷன் காட்டுவதாக எல்லோருமே கிண்டலடிக்க, அடிக்கடி போன் பேசுவதாக பாண்டியனிடம் கோமதி குத்தம் சொல்கிறார்.
கோமதிக்கு வந்த சந்தேகம்
என்னதான் அரசி தனது ஃப்ரண்ட்ஸ் உடன் படிப்பு பற்றி போனில் பேசியதாக சொன்னாலும் கூட கோமதி உள்பட மற்ற யாரும் நம்பவில்லை. ஆனால், அவருக்கு ஆதரவாக சுகன்யா பேசவே, கடைசியில் பாண்டியன் நம்பினார். உண்மையில் அரசி யாரிடம் பேசினார் என்று தனக்கு தெரியும் என்று சுகன்யா அரசியிடம் கூறவே, ஒருவித பதற்றத்துடன் அரசி இருக்கிறார்.
அரசி மனதில் காதலை விதைக்கும் சுகன்யா
இறுதியாக சுகன்யா, குமாரவேல் பற்றி நல்லவிதமாக எடுத்து சொல்லவே, அரசியும் மெய்மறந்து நின்றார். இரண்டு குடும்பமும் ஒன்று சேர குமாரவேல் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என்று சுகன்யா அரசியிடம் பேசி அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். அப்போது மீனா உள்ளே வருகிறார். அவர் வந்தவுடன் சுடிதார், துப்பட்டா பற்றி பேசுகிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.