என்னெல்லாம் பொய் சொல்லிருக்க? தங்கமயிலை துருவி துருவி கேள்வி கேட்ட சரவணன்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 456ஆவது எபிசோடில் கோமதி தனது மகள் மற்றும் மருமகளுடன் கோயிலுக்கு புறப்பட்டு செல்வது முதல் சரவணன் துருவி துருவி தங்கமயிலிடம் கேள்வி கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

உண்மையை தெரிந்து கொண்ட சரவணன்:
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 456ஆவது எபிசோடில் தங்கமயிலுக்கு 4 நாட்கள் லீவு கொடுத்துவிட்டார்கள் என்று சரவணன் தனது மனைவிக்காக வீட்டில் பொய் சொல்லிவிட்டார். ஏற்கனவே அவருக்கு ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பது தெரிந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். ஆனால், இன்னும் அவர் ஆபிஸில் வேலை பார்க்கவில்லை ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கிறார் என்று சொல்லவில்லை. அது ஏன் என்பது தான் இன்னும் தெரியவில்லை.
Sukanya Not Intrusted go to Temple
கோமதியுடன் கோவிலுக்கு செல்லாத சுகன்யா:
கோமதி, ராஜீ, மீனா, தங்கமயில், அரசி என்று எல்லோருமே வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு செல்கிறார்கள். இதற்காக வீட்டை யார் பார்த்து கொள்ள வேண்டும், வீட்டில் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பது பற்றி கோமதி வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்து சொல்கிறார். கோமதியுடன் சேர்ந்து சுகன்யா கோயிலுக்கு செல்லவில்லை.
Pandian Stores: மயிலை மாட்டி விட்டாரா சரவணன்? மீனா காட்டிய ஆதாரம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
Saravanan Asking Question For Thangamayil:
வேற ஏதாவது பொய் சொல்லிருக்கியா:
வீட்டில் சரவணன், பழனிவேல், செந்தில், கதிர் மற்றும் சரவணன் ஆகியோர் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களுக்கு சமையல் செய்ய சுகன்யாவை இருக்க வைத்துள்ளனர். இதை தொடர்ந்து மீண்டும் தங்கமயில் மற்றும் சரவணன் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஹோட்டல் வேலைக்கு சென்றது குறித்து திரும்ப திரும்ப சரவணன் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். டூப்ளிகேட் சான்றிதழ் கிடைக்கும் வரையில் வீட்டில் இருக்கலாம். அப்படியில்லை என்றால் ஹோட்டல் வேலைக்கு தான் செல்கிறேன் என்று எங்களிடம் உண்மையை சொல்லியிருக்கலாம். டூப்ளிகேட் சான்றிதழுக்கு அப்ளை செய்துவிட்டாயா? அதன் பிறகு அதனை பாலோ பண்ணியா? வேலை போற விஷயத்தில் மட்டும் தான் பொய் சொல்லிருக்கியா? அல்லது வேற ஏதாவது பொய் சொல்லிருக்கியா என்றெல்லாம் சரவணன் கேள்விகள் கேட்க அழ்துகொண்டே தங்கமயில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
Sukanya Call to Pazhani Vel
பழனிவேலை வீட்டுக்கு அழைக்கும் சுகன்யா:
பிறகு காலையில் எல்லோருமே கோயிலுக்கு புறப்படுகிறார்கள். சரவணன் மட்டும் வீட்டில் இல்லை. அவர், அவசர வேலை இருப்பதாக கூறி காலையிலேயே வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து எல்லோருமே கோயிலுக்கு புறப்பட்டனர். இறுதியாக பழனிவேல் மற்றும் சுகன்யா தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. இதில், சுகன்யா, பழனிவேலுக்கு திரும்ப திரும்ப போன் போடவே பழனிவேல் எடுக்கவில்லை. கடைசியில் பாண்டியன் சொல்லி போனை எடுத்த பழனிவேலுவிடம் உடனே கிளம்பி வீட்டிற்கு வாங்க என்று சொல்லவே, அப்படியெல்லாம் வர முடியாது என்று பழனிவேல் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
Pandian Stores: சக்தி வேலுக்கு ஆப்பு வச்ச மீனா; சரவணனிடம் சிக்கிய தங்கமயில் - நடக்க போவது என்ன?
Pandian Stores upcoming Episode:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் எபிசோடுகள்:
நான்கு நாட்கள் தானே நீ கொஞ்சம் பொறுத்துக் கொள். உங்களை எல்லாம் கல்யாணம் பண்ணுக்கு எங்கையாவது போயிருக்கலாம் என்று திட்டிவிட்டு போனை கட் செய்துள்ளார். இன்று எந்த வேலையும் இல்லாத சரவணன் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டார். செந்தில் நீ பார்த்து கற்றுக் கொள். எப்படி வேலை இல்லை என்று தெரிந்து உடனே கடைக்கு வந்துருக்கான் பாரு என்று செந்திலிடம் கூறுகிறார் பாண்டியன். அதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 456ஆவது எபிசொடு முடிவடைந்தது. இனி நாளை கோயிலுக்கு சென்றவர்களின் காட்சி இடம் பெறலாம் அல்லது இடம் பெறாமலும் போகலாம். அப்படியில்லை என்றால் பழனிவேல் மற்றும் சுகன்யாவின் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.