- Home
- Cinema
- Pandian Stores: மயிலை மாட்டி விட்டாரா சரவணன்? மீனா காட்டிய ஆதாரம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
Pandian Stores: மயிலை மாட்டி விட்டாரா சரவணன்? மீனா காட்டிய ஆதாரம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 455ஆவது எபிசோடானது மீனா, அரசி, தங்கமயில் ஆகியோரது காட்சிகளை மையப்படுத்தி நகர்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனுக்கு தனது மனைவி ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் உண்மை தெரிந்துள்ளது. அதன் பிறகு என்ன நடக்கும்? தனது அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ என்ற ஒரு வித பயத்துடன் தங்கமயில் இருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக அவர் அந்த வேலையைவிட்டு வேறு வேலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
Meena give the proof
பாண்டியனிடம் ஆதாரத்தை காட்டிய மீனா:
அதனை தனது அப்பாவிடம் எப்போது சொல்ல போகிறாய் என்று சரவணன் கேட்கிறார். அதோடு அந்த காட்சி முடிவடைகிறது. இதே போன்று அரசு இடத்தில் அத்துமீறி கட்டப்பட்டிருக்கும் சக்திவேலின் கடையை சட்டப்படி இடித்த கையோடு மீனா வீட்டிற்கு வருகிறார். அங்கு பாண்டியனிடம் தான் செய்தது சரி தான் என்பதற்கான ஆதாரத்தை காட்டி தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கிறார்.
Pandian Stores : சொதப்பிய மீனாவின் பிளான்? கோயிலில் நடந்தது என்ன - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
Meena demolished Sakthi shop
சட்டப்படி நான் நடவடிக்கை எடுத்தேன்:
ஆனால், கோமதியோ கடையை இடிக்காமல் விட்டிருக்கலாம் என்று மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மொத்தம் 7 பேர் தங்களது கடைகளை இடித்துவிட்டார்கள். இவர் மட்டும் தான், 3 முறை எச்சரித்தும் கடையை அகற்றவில்லை. அதனால், சட்டப்படி நான் நடவடிக்கை எடுத்தேன். ஒருவேளை சொந்தம் என்று அவரது கடையை உடைக்காமல் விட்டிருந்தால் எல்லோருமே பேச ஆரம்பித்திருப்பாகள். மேலும், எனக்கு கெட்டப்பெயர் வந்திருக்கும் என்றார்.
Arasi Not Pick Sathish Phone Call
அரசிக்கு என்னை பிடிக்கவில்லையா?
இதே போன்று ராஜீயிடம் கேட்கவே, அவரும் அக்கா உங்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அப்பாவும், சித்தப்பாவும் தப்பு செய்தார்கள். அதனால் அவர்களது கடையை இடித்தீர்கள் என்று கூறியுள்ளார். இறுதியாக அரசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சதீஷ், மீனாவிற்கு போன் போட்டு அரசிக்கு என்னை பிடிக்கவில்லையா? நான் போன் போட்டால் எடுக்கவே இல்லை என்று கூறிகிறார். அதற்கு மீனாவும் அரசிக்கு சாதகமாக பேசுகிறார். இதையடுத்து அரசியிடம் பேசி புரிய வைக்கிறார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கலவையான காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
Pandian Stores Update: அரசியின் படிப்பிற்காக போராடும் மீனா; பரபரப்பாகும் திருமண வேலை?
Upcoming Serial Episode
அடுத்தடுத்த எபிசோடுகள் என்ன?
மேலும், கடந்த சில நாட்களாக பழனிவேல் மற்றும் சுகன்யா ஆகியோரது காட்சிகள் இடம் இடம் பெறவில்லை. அதே போன்று தான் முத்துவேல், வடிவு, மாரி ஆகியோரது காட்சிகளும் இடம் பெறவில்லை. இனி வரும் எபிசோடுகளில் அவர்களது காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.