- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores Update: அரசியின் படிப்பிற்காக போராடும் மீனா; பரபரப்பாகும் திருமண வேலை?
Pandian Stores Update: அரசியின் படிப்பிற்காக போராடும் மீனா; பரபரப்பாகும் திருமண வேலை?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் திருமணத்திற்கு மண்டபம் பிடிக்க ஏற்பாடுகள் நடக்க, மீனா அரசியின் படிப்பிற்காக போராடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Pandian Stores 2 Update:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய அப்டேட்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 449ஆவது எபிசோடானது பாயாசம் காட்சியுடன் தொடங்கி கடைசியில் மீனா மற்றும் சதீஷின் உரையாடல் உடன் முடிவடைகிறது. சதீஷிற்கும் அரசிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, வீட்டில் வருங்கால மாப்பிள்ளையான சதீஷிற்கு கோமதி பாயாசம் செய்து கொடுக்கிறார்.
Gomathi Clarify Sathish Dubai Plan:
மாப்பிள்ளை துபாய்க்கு செல்வதாக இருக்கும் திட்டம் பற்றி கோமதி விசாரிக்கிறார்:
சதீஷ் தனது மச்சான்கள் முறையான செந்தில், சரவணன் மற்றும் கதிர் ஆகியோரை ப்ரோ என்று கூப்பிடுகிறார். அதற்கு சதீஷின் அம்மா அப்படியெல்லாம் கூப்பிட கூடாது. முறையாக மச்சான்கள் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். மாப்பிள்ளை துபாய்க்கு செல்வதாக இருக்கும் திட்டம் பற்றி கோமதி விசாரிக்கிறார்.
Pandian Stores: அரசிக்கு அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம்; அதிர்ச்சியில் உறைந்த மருமகள்கள்!
Meena Planning
மீனா திட்டம்:
ஏற்கனவே அரசியின் படிப்பு காரணமாக இப்போதைக்கு அரசிக்கு திருமணம் வேண்டாம் என்று மீனா, தங்கமயில், ராஜீ ஆகியோர் பேசிக் கொண்டிருந்த நிலையில் மாப்பிள்ளை நன்றாக தான் இருக்கிறார். ஆனால் கடைசி வரை அரசியை பத்திரமாக பார்த்துக் கொள்வாரா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள மீனா திட்டம் போட்டுகிறார். அதற்காக மாப்பிள்ளையிடம் நம்பர் வாங்க கதிரை தூது அனுப்புகிறார்.
Arasi Wedding Plan to Marriage Hall
இறுதியில் மண்டபத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்:
கதிரும் அதற்கேற்ப மாப்பிள்ளையிடம் தாஜா செய்து எப்படியோ போன் நம்பர் வாங்கி ராஜீயிடம் கொடுக்கிறார். அவரோ மீனாவிடம் கொடுத்து பேச சொல்கிறார். திருமணத்தை எங்கு நடத்த வேண்டும், கோயிலிலா அல்லது மண்டபத்திலா என்ற விவாதம் பாண்டியன், கோமதி, பழனிவேல் ஆகியோர் பேசி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து இறுதியில் மண்டபத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
Pandian Stores 2: பழனியை அசிங்கப்படுத்த கீழ்த்தனமாக இறங்கிய சுகன்யா! கேவலப்படுத்திய பாண்டியன்!
Pandian About Arasi Wedding:
சொன்ன தேதியில் கண்டிப்பான முறையில் திருமணம் நடக்கும்:
அந்த நேரத்தில் மீனாவும் எதற்கு இவ்வளவு அவசரமாக அரசியின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்க வருவதை அறிந்து கொண்டு கோமதியும் பாண்டியனும் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆனால், கடைசி வரை பாண்டியன் அரசியை நம்பமாட்டேன் என்று கூறியுள்ளார். இறுதியாக உமையாள் அக்காவின் மகன் சதீஷை அரசி திருமணம் செய்து கொள்வது தான் எல்லோருக்கும் நல்லது. நமது குடும்பத்திற்கும் கௌரவம் என்றும், யார் என்ன சொன்னாலும் சொன்ன தேதியில் கண்டிப்பான முறையில் திருமணம் நடக்கும் என்று பாண்டியன் அரசியின் திருமணத்தில் உறுதியாக இருக்கிறார்.
Arasi Marriage:
புகுந்த வீட்டார் முடிவு செய்ய வேண்டும்:
மேலும், அரசி படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து திருமணத்திற்கு பிறகு அவரது புகுந்த வீட்டார் முடிவு செய்ய வேண்டும் என்று பாண்டியன் கூறவே, அரசியை நம் வீட்டில் வைத்து படிக்க வைக்க முடியாது. ஆதலால், அவர்கள் முடிவு செய்யட்டும். மேலும் அரசிக்காக நாம் சேர்த்து வைத்த நகையும், அவரது பெயரில் வங்கியில் பணமும் போட்டு வைத்திருக்கிறேன். அக்கா வீட்டிலிருந்து வரதட்சணையாக எதுவும் கேட்கவில்லை.
Pandian Stores: உண்மையை உடைத்த மீனா; ஆத்திரத்தில் அறைந்த பழனி! சுகன்யாவின் நாடகம் அரங்கேற்றம்!
Meena Decided To Talk Sathish
அரசி படிப்புக்காக சதீஷிடம் பேச முடிவு செய்த மீனா:
அதனால், நாம் அரசிக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்றார் பாண்டியன். கடைசி காட்சியாக அரசியின் படிப்பிற்காக நாம் மாமாவிடம் பேசினேன். ஆனால், மாமா அதற்கு சம்மதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் சதீஷிடமே பேசிடலாம் என்று மீனா திட்டம் போடுகிறார். அதில் அரசியின் படிப்பு ரொம்பவே முக்கியம். அதில் எந்த பாதிப்பும் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பது குறித்து சதீஷிடம் பேசிடலாம் என்று மீனா திட்டம் போட்டு சதீஷை பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் கருமாரி அம்மன் கோயிலுக்கு வர சொல்கிறார். சதீஷூம் வருவதாக சொல்லியிருக்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 449ஆவது எபிசோடு முடிவடைகிறது. சதீஷ் அரசி படிப்புக்கு என்ன சொல்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.