- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores: அரசிக்கு அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம்; அதிர்ச்சியில் உறைந்த மருமகள்கள்!
Pandian Stores: அரசிக்கு அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம்; அதிர்ச்சியில் உறைந்த மருமகள்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடானது பெண் பார்க்கும் படலத்துடன் ஆரம்பித்து திருமண நிச்சயதார்த்தத்துடன் முடிவடைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 448ஆவது எபிசோடானது அரசிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்துடன் தொடங்குகிறது. நேற்றைய 447ஆவது எபிசோடில் பாண்டியனின் அக்காவும், மாமாவும் தனது மகன் சதீஷை அழைத்துக் கொண்டு அரசியை பெண் பார்க்க வந்தனர். அதில் புதிய எண்ட்ரியாக பாண்டியனின் அக்கா மகனை அறிமுகம் செய்தனர். அவரது இண்ட்ரோ சீனும் காரிலிருந்து இறங்குவது போன்று இருந்தது. வீட்டிற்கு வந்து அரசியை பெண் பார்ப்பது போன்ற சீனுடன் நேற்றைய எபிசோடு முடிந்தது.
திருமணத்திற்கு சம்மதம் சொன்ன சதீஷ்
இன்று தொடங்கிய எபிசோடில் அரசியிடம் தனியாக பேச வேண்டும் என்று சதீஷ் கேட்க அதற்கு பாண்டியனும் அரசியை தனியாக அனுப்பி வைத்தார். கூடவே மீனாவும் சென்றார். சதீஷ் மட்டுமே பேசிக் கொண்டு இருக்க, அரசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மீனா தான் பேசிக் கொண்டே இருந்தார். பின்னர் சபையில் எல்லோர் முன்பும் தனக்கு அரசியை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதே போன்று அரசியின் சம்மதமும் கேட்கவே, அதற்கு தலையை மட்டுமே ஆட்டுகிறார்.
Pandian Stores 2: பழனியை அசிங்கப்படுத்த கீழ்த்தனமாக இறங்கிய சுகன்யா! கேவலப்படுத்திய பாண்டியன்!
2 மாதத்திற்குள் திருமணம்:
இந்த திருமணத்தில் அரசிக்கு சம்மதம் இல்லை என்றே தெரிகிறது. மேலும், எப்படியும் திருமணத்திற்கு பஞ்சாயத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 மாசத்தில் சதீஷ் துபாய் சென்று இப்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குவான் என்று ஆஹா ஓஹோ என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே பேசியபடி திருமண நிச்சயத்தையும் சேர்த்தே பண்ணிடலாம் என்று பாண்டியனின் அக்கா கேட்க, அதற்கு பாண்டியனும் ஓகே என்று சொல்லிவிட்டார்.
அரசிக்கு திருமண தேதி குறிச்சாச்சு:
இது பாண்டியனின் மகன் மற்றும் மருமகள்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் 2 மாசத்தில் சதீஷிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அதன்படியே நாங்கள் 2 மாசத்தில் திருமணம் செய்து வைக்க எண்ணி திருமண தேதியையும் குறித்துவிட்டோம் என்று பாண்டியனின் அக்கா சொல்லிவிட்டார்.
Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!
அரசியின் படிப்பை பற்றி சிந்திக்கும் ராஜீ - மீனா:
இதைத் தொடர்ந்து திருமண நிச்சய பத்திரிக்கை வாசித்து திருமண நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்தது. பின்னர் ஏன் இவ்வளவு அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்து, திருமணத்திற்கு தேதியும் குறிச்சாங்க என்று பாண்டியனின் மருமகள்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்கள். அதோடு மாப்பிள்ளையின் நம்பர் வாங்கி ஏதாவது பண்ண முடியுமா என்று பார்ப்போம் என்று பேசிய நிலையில், அரசியின் படிப்பு ரொம்பவே முக்கியம். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு நம்பர் எப்படி வாங்குவது, யாரிடம் கேட்பது என்று பேசிக் கொண்டே கதிர் தான் சரியான ஆளு. அவர் வாங்கி கொடுத்துவிடுவார் என்று ராஜீ சொல்வதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 448ஆவது எபிசோடு முடிகிறது.