- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கண்ணீர் விட்டு கதறி அழும் பழனிவேல் – கடைக்காக டிராமா போடும் தங்கமயில் அண்ட் மாணிக்கம்!
கண்ணீர் விட்டு கதறி அழும் பழனிவேல் – கடைக்காக டிராமா போடும் தங்கமயில் அண்ட் மாணிக்கம்!
Palanivel Crying after Pandian Scolding him : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடந்தது அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழனிவேலுவை அவமானப்படுத்திய பாண்டியன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் மற்றும் அவருடைய அப்பா மாணிக்கம் இருவரும் கடைக்கு வந்தது முதல் தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. முதலில் கள்ளாபெட்டியில் உட்கார்ந்த மாணிக்கம், அடுத்ததாக ரூ.500 பணத்தை ஆட்டைய போட்டார். அதன் பின்னர் தங்கமயிலை உட்கார வைத்தார். இதைத் தொடர்ந்து ரூ.1100 பணத்தை திருடினார். அப்போது சரவணன் தனது கண்ணால் பார்த்துவிட்டார். இதைப் பற்றி தங்கமயிலிடம் கேட்டு இருவரும் சண்டையிட்டார். மேலும், தங்கமயில் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் நாடகமாடி எப்படியோ திரும்பவும் வீட்டிற்குள் சென்றார்.
பாண்டியன், பழனிவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் உண்மையை மறைத்துவிட்டதாக தங்கமயிலிடம் சண்டை போட்டார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது, இனி என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஏற்கனவே ரூ.1100 ஐ பழனிவேல் எடுத்துவிட்டதாக பாண்டியன் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது கடையில் டெலிவரிக்கு போக சொன்ன நிலையில் அவரை சரவணன் வேண்டாம், நீங்கள் கடையிலேயே இருங்கள். நான் டெலிவரி வேலையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் டெலிவரி கொடுக்க சென்றுவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இதைத் தொடர்ந்து கடைக்கு வந்த பாண்டியன், பழனிவேல் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவரை திட்ட ஆரம்பித்தார். அவருடன் இணைந்து மாணிக்கம் மற்றும் தங்கமயில் இருவரும் ஏத்திவிடவே பழனிவேல் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதார். இதை பற்றி கதிரிடம் வந்து சொன்னார். அவரும் பழனிவேலுவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சுகன்யா வீட்டிலிருந்து பழனிவேலுவிற்கு தீபாவளி சீர் கொண்டு வர இருக்கிறார்கள்.
விஜய் டிவி சீரியல்
மீனாவிற்கும் அவரது அப்பா, அம்மா இருவரும் தீபாவளி சீர் கொடுத்தனர். ஆனால், தங்கமயிலுக்கு மட்டும் கொடுக்கவில்லை. இதற்காக மாணிக்கம் தங்கமயிலிடம் கேட்க, அவரும் நம்முடைய நிலைமை தெரியும். அதனால், தான் நானும் கேட்கவில்லை என்றார். அதற்கு மாணிக்கம், ஒரு ஐடியா கொடுத்தார். அதாவது, நீ யாரிடமாவது பணம் வாங்கி கொடு, நான் உனக்கு சீர் செய்கிறேன் என்றார். அப்போது தான் பாண்டியனுக்கு ஒருவர் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.
விமர்சித்தவர்களுக்கு இசையால் பதிலடி கொடுத்த இளையராஜா... இசைஞானியின் தக் லைஃப் சம்பவம்..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அவரும் கொண்டு வந்தார். ஆனால், கடையில் பாண்டியன் இல்லாத நிலையில் அதனை தங்கமயிலின் அப்பா மாணிக்கம், அதாவது பாண்டியனின் சம்பந்தி பெற்றுக் கொண்டு தன்னுடைய பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இன்றைய எபிசோடில் தன்னுடைய மருமகனுக்கு நாள் செய்து தீபாவளிக்கு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த பணத்தை எப்போது திரும்ப கொடுப்பார் என்று தான் தெரியவில்லை. ஏற்கனவே கள்ளாவிலிருந்து ரூ.500, ரூ.1100 எடுத்த நிலையில் இப்போது மொத்தமாக ரூ.10,000 பணத்தை எடுத்துள்ளார்.
கூட்டத்திற்கு நடுவே தனி ஒருவனாய் தளபதி; 'ஜனநாயகன்' புதிய போஸ்டர் வெளியானது!