கூட்டத்திற்கு நடுவே தனி ஒருவனாய் தளபதி; 'ஜனநாயகன்' புதிய போஸ்டர் வெளியானது!
Thalapathy Vijay starring Jananayagan movie new poster released: தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .

வசூல் மன்னன் விஜய்:
கோலிவுட் திரை உலகில், உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இதுவரை யாரும் பெறாத அளவுக்கு அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் உள்ளார். சமீபத்திய தகவலின் படி, விஜய் தன்னுடைய படங்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக, அவரே மேடையில் கூறியிருந்தார். அதே போல் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி, அதிரடியாக அரசியலில் கால் பதித்தால் நடிப்பதற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார் .
விஜய்க்கு குவியும் ஆதரவு:
விஜயின் இந்த முடிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருக்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள் மக்கள். சமீபத்தில் இவர் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டங்கள் அனைத்திலும், கூட்டம் அலைகடல் போல் திரண்டு தங்களின் ஆதரவை கொடுத்தது ஆளும் கட்சிக்கே சற்று நடுக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.
ஜனநாயகன்:
இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட் அல்லது போஸ்டர் குறித்த தகவல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .
ஜனநாயகன் புதிய போஸ்டர் வெளியானது:
ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, தளபதி விஜயின் புதிய போஸ்டர் ஒன்றை 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தளபதி விஜய் தனி ஒருவனாக நெஞ்சை நிமிர்த்தி... ஆயிரக்கணக்கானோர் மத்தியில் கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, நீல நிற சட்டையில் முறுக்கு மீசையோடு உள்ளார். கழுத்தில் கருப்பு நிற கயிறு ஒன்றும் அணிந்துள்ளார். மேலும் விஜய் நெஞ்சின் மீது மக்கள் கை கைவைத்துள்ளனர். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
ஜனநாயகம் படம் பற்றிய விவரம்:
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த திரைப்படத்தில், தளபதி விஜய் அரசியல் கலந்த கதைக்களத்தில் நடிக்கிறார். மேலும் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரை தவிர மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன், மோனிஷா பிளஸி, டி ஜே அருணாச்சலம், ரேவதி, நிழல்கள் ரவி, போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.