- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உன்னைப்பத்தி சொல்லாம விடமாட்டேன் டி... விறுவிறுவென கிளம்பிய மீனாவுக்கு ஷாக் தந்த ரோகிணி - சிறகடிக்க ஆசை
உன்னைப்பத்தி சொல்லாம விடமாட்டேன் டி... விறுவிறுவென கிளம்பிய மீனாவுக்கு ஷாக் தந்த ரோகிணி - சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ரோகிணி பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரியவந்த நிலையில், அதை அவர் குடும்பத்தினரிடம் சொன்னாரா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில், தீபாவளி கொண்டாட அனைவரும் முத்துவின் பாட்டி ஊருக்கு சென்றிருந்த நிலையில், அங்கு கோவில் பூஜையில் கலந்துகொள்ள ஃபேமிலியோடு செல்கிறார்கள். அந்தக் கோவிலில் தான் ரோகிணியின் தந்தைக்கு திதி கொடுக்க லட்சுமி ஏற்பாடு செய்து வைத்திருந்தார். இதற்காக கிரிஷையும் அழைத்து வந்திருந்தார். குளக்கரையில் ரோகிணி தன்னுடைய தந்தைக்கு திதி கொடுக்க சென்றிருந்த நிலையில், அதை மீனா பார்த்துவிட்டார். ரோகிணி தான் கல்யாணி என்கிற நீண்ட நாள் ரகசியம் மீனாவுக்கு தெரியவருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மீனாவிடம் கெஞ்சும் ரோகிணி
நீ மட்டும் நல்லா இருந்தா போதும், அதற்காக யாரை வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏமாத்துறது சரினு நினைச்ச பாத்தியா, அதுக்காகவே உன்னைப் பத்தி வீட்ல சொல்ல தான்-டி போறேன் என சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பும் மீனாவை தடுத்து நிறுத்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் ரோகிணி. ப்ளீஸ் மீனா, என் வாழ்க்கை, உயிரு எல்லாமே உங்க கையில தான் இருக்கு. நான் செஞ்சது எல்லாமே தப்பு தான். தயவு செஞ்சு இதையெல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாத மீனா என கெஞ்சுகிறார். அருகில் இருந்த கிரிஷும், சொல்லிடாதீங்க ஆண்ட்டி என கெஞ்சிக் கேட்கிறார்.
எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் ரோகிணி
அதற்கெல்லாம் மீனா செவிசாய்க்காததால், அவரை எமோஷனல் பிளாக்மெயில் செய்ய முடிவெடுத்த ரோகிணி, கிரிஷை அழைத்துக் கொண்டு விறுவிறுவென குளக்கரைக்கு சென்று அங்கு குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார். எல்லார் கிட்டயும் போய் சொல்லு மீனா, இனிமே எனக்கு வாழ்க்கை இல்லைனு ஆனதுக்கு அப்புறம், நான் இருந்தென்ன பிரயோஜனம், நான் இல்லேனா என் பையனுக்கு யார் இருக்கா, அவனை அனாதையா இந்த உலகத்துல நான் விட்டுட்டு போக விரும்பல, நானும் என் பையனும் போய் சேருரோம், நான் தேடிய வாழ்க்கை எனக்கு கிடைக்கலேனா நான் வாழ்றதே வேஸ்ட் என கூறுகிறார் ரோகிணி.
மீனா எடுத்த அதிரடி முடிவு
நானும் என் பையனும் இந்த குளத்துல விழுந்து சாகப் போறோம் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென தண்ணிக்குள் குதிக்க சென்ற ரோகிணியை தடுத்து நிறுத்தும் மீனாவிடம், இந்த உண்மையெல்லாம் வீட்ல சொல்லமாட்டேன்னு சொல்லுங்க மீனா என ரோகிணி கேட்க, நீண்ட நேரம் யோசிக்கும் மீனா, இறுதியாக சொல்ல மாட்டேன் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இருவரும் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துகொள்கிறார்கள். அப்போது மீனா கடும் அப்செட்டில் அமர்ந்திருக்க, அவரிடம் என்ன ஆச்சு என அனைவரும் கேட்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.