- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இவ்ளோ நாள் ஏன்டி ஏமாத்துன... ரோகிணியை அடிவெளுத்த மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
இவ்ளோ நாள் ஏன்டி ஏமாத்துன... ரோகிணியை அடிவெளுத்த மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற விஷயத்தை கண்டுபிடித்த மீனா, அவரை லெஃப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் தீபாவளி கொண்டாட அனைவரும் முத்துவின் பாட்டி ஊருக்கு சென்றிருக்கும் நிலையில், அங்குள்ள கோவிலில் சென்று குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்கின்றனர். அப்போது பூஜைக்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க ரோகிணி அவரது அம்மாவிடம் இருந்து போன் வருகிறது. தன்னுடைய கிளையண்ட் அழைப்பதாக பொய் சொல்லிவிட்டு ஓரமாக போய் பேசும் ரோகிணிக்கு அவருடைய அம்மா அதிர்ச்சி கொடுக்கிறார். நாம் திதி கொடுக்க இருந்த கோவிலை மூடிவிட்டதால், தற்போது அதன் அருகில் இருக்கும் கோவிலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். கடைசியில் பார்த்தால், ரோகிணி இருக்கும் கோவிலுக்கு தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
திதி கொடுக்க வந்த ரோகிணி
குளக்கரையில் இருப்பதாகவும், எப்படியாவது நீ அங்கு வந்துவிடு என்று லட்சுமி சொல்ல, தனக்கு வயிறு சரியில்லை, என சொல்லிவிட்டு கோவிலை விட்டு வெளியே வரும் ரோகிணி, குளக்கரையில், அமர்ந்து திதி கொடுக்கிறார். அப்போது உள்ளே பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும் பூசாரி, ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வரச் சொல்கிறார். அதுவும் வீட்டு மருமகள் தான் எடுத்து வர வேண்டும் என்று சொல்ல, மீனா தான் எடுத்து வருவதாக கூறி குடத்தை வாங்கிக் கொண்டு குளக்கரைக்கு செல்கிறார். அப்போது அங்கு ரோகிணி, கிரிஷ், லட்சுமி ஆகியோரோடு அமர்ந்து திதி கொடுப்பதை பார்த்துவிடுகிறார்.
மீனாவுக்கு தெரியவரும் உண்மை
அப்போது லட்சுமி, ஐயரிடம் இவ என்னுடைய ஒரே பொண்ணு கல்யாணி என சொல்வதையும், இதுதான் அவளுடைய பையன் கிரிஷ் என கூறுவதையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். திதி கொடுப்பது முடிந்ததும், மீனா அங்கு வந்திருப்பதை பார்த்துவிடும் ரோகிணி, அதிர்ந்து போகிறார். பின்னர் நைசாக அவர் அருகில் சென்று, நான் இங்கு சும்மா வந்தேன், அப்போ அவங்க வந்திருப்பதை பார்த்ததும் அவர்களுடன் பூஜையில் கலந்துகொண்டேன் என்று பொய் சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான மீனா, ரோகிணிக்கு பளார் என அறைவிடுகிறார். இப்பவும் கூச்சமே இல்லாம நடிக்குறேல்ல என திட்டுகிறார்.
ரோகிணியை திட்டித்தீர்த்த மீனா
அப்போது அருகில் இருக்கும் லட்சுமி வேண்டாம் மீனா அவள விட்று என சொல்ல, அதற்கு அவர், இவளவிட நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க. இவ தான் உங்க துபாய்ல இருக்குற பொண்ணா என கேட்க, பதில் பேச முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறார் லெட்சுமி. பின்னர் ரோகிணியை பார்த்து, உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா... எத்தனை பொய் சொல்லிருக்க. நீயெல்லாம் ஒரு பொண்ணா, எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை அடிச்சே கொல்லனும் போல இருக்கு என சரமாரியாக சாடுகிறார். உடனே ரோகிணி, என்னை அடி மீனா என அழுதபடி, நான் சொல்றத கொஞ்சம் கேளு என கேட்கிறார். அதற்கு மீனா, வாயமூடு டி என கூறுகிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது?
இன்னும் எவ்ளோ பொய் சொல்லி நடிக்க போற, ஒரு குடும்பத்தையே ஏமாத்திட்டு இருந்திருக்க. நினைச்சாலே எனக்கே கை கால் எல்லாம் நடுங்குது. எப்புடி டி உன்னால இவ்ளோ பொய் சொல்லி ஏமாத்த முடிஞ்சது. மொத்த குடும்பமும் இங்க இருக்கும்போதே இங்க வந்து இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும். கிரிஷ் மேல நாங்க வச்ச பாசத்தை உங்களுக்கு சாதகமாக்கி எங்களை முட்டாள் ஆக்கிட்டீங்க. உன் பெயர் கூட உண்மையானது கிடையாதுல. அம்மா இறந்துட்டாங்கனு சொன்னியே அப்ப இவங்க யாரு. உனக்கு பொறந்த குழந்தைய மறைச்சு அவனையும் ஒரு அனாதை மாதிரி அலைய வச்சிருக்க. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி என சரமாரியாக சாடுகிறார் மீனா. ரோகிணி பற்றிய உண்மை வெளியானதால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.