- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாட்டி சொன்ன மேட்டரால் பீதியில் மீனா... நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
பாட்டி சொன்ன மேட்டரால் பீதியில் மீனா... நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை கோவிலில் பார்த்த சாமியாடி ஒருவர் அவரை ஊரைவிட்டே போகச் சொன்ன நிலையில், அவரைப்பற்றிய பகீர் தகவலை பாட்டி வெளியிட்டு இருக்கிறார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக அண்ணாமலையின் சொந்த ஊருக்கு அனைவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் மீனா, முத்து உடன் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சாமியாடி ஒருவர், மீனாவைப் பார்த்து இந்த ஊரைவிட்டே போயிடு என்று சொல்ல அதைக் கேட்ட மீனா மிரண்டு போனார். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னரும் அதே நினைப்பாகவே இருக்கிறார் மீனா. வீட்டில் உள்ள அனைவரும் ஆடிப் பாடி சந்தோஷமாக இருக்க, மீனா மட்டும் அந்த சாமியாடி சொன்னதை நினைத்து ஒரு ஓரமாக நிற்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சாமியாடி பற்றி பாட்டி சொன்ன ரகசியம்
விஜயா உடன் முத்து, ரோகிணி, மனோஜ், ரவி, ஸ்ருதி ஆகியோர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, மீனா மட்டும் சோகமாக நிற்பதை பார்த்த முத்துவின் பாட்டி, அவரிடம் சென்று நான் அப்போதிலிருந்தே உன்னை கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன். சோகமாவே இருக்க, என்ன ஆச்சு என கேட்க, அதற்கு மீனா கோவிலில் நடந்த விஷயத்தை கூறுகிறார். அப்போது, அந்த சாமியாடி யார் பாட்டி என முத்து கேட்க, அவன் யாருனே தெரியல, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் இந்த ஊருக்கே வந்தான். அவன் கோவில்லயே தான் இருப்பான். யாராவது சாப்பிட கொடுத்தாகூட அவனுக்கு பிடிச்சிருந்தா தான் வாங்குவான் என பாட்டி சொல்கிறார்.
பீதியில் மீனா
அதுமட்டுமின்றி அந்த சாமியாடி பற்றி மேலும் ஒரு பகீர் தகவலை கூறுகிறார் பாட்டி. அதன்படி அவர் என்ன சொன்னாலும் நடக்கும் என சொல்லும் அவர், அதற்கு உதாரணமாக, ஒரு முறை மழை வரப் போகுது என சொன்னதும் மழை வந்ததாகவும், ஒரு பெண் பல வருடங்களாக கல்யாணமே ஆகாமல் இருந்த நிலையில், அவளிடம் தாலி கட்டிக்கோனு சொன்னான், அவன் சொன்ன 10 நாள்லயே அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சு. இப்படி அவன் சொன்னதெல்லாம் நடக்கும் என பாட்டி கூறியதால் மேலும் பதற்றமடைந்த மீனா, என்ன நடக்கப் போகிறதோ என்கிற பீதியிலேயே இருக்க, இரவில் அந்த சாமியாடி வீட்டுக்கே வந்துவிடுகிறார்.
சாமியாடி கொடுத்த வார்னிங்
வீட்டின் பின்புறம் வந்து அவர் சத்தம் போட்டதை கேட்டு அனைவரும் சென்று பார்க்க, அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கும் அந்த நபர், ரோகிணியை பார்த்து மட்டும் முறைத்ததால், அவர் ஷாக் ஆகிப்போனார். பின்னர் மீனாவை கைகாட்டி, போயிடு, ஊரைவிட்டே போயிடு என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மீனாவுக்கு மேலும் பயம் வந்துவிட்டது. மறுபுறம் ரோகிணி அவரது அப்பாவுக்கு திதி கொடுப்பதாக இருந்த கோவிலில் அமைந்துள்ள ஊரில் ஒரு சாவு விழுந்ததால், அருகில் உள்ள வேறு ஒரு கோவிலுக்கு ரோகிணியை வரச் சொல்லி இருக்கிறார் லெட்சுமி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.