MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்நிகழ்ச்சியில் ரக்‌ஷனுக்கு பதில் புது ஆங்கரை களமிறக்கி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
OG Anchor in Cooku With Comali Season 7
Image Credit : X

OG Anchor in Cooku With Comali Season 7

விஜய் டிவி என்றாலே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் விஜய் டிவியில் முழுக்க முழுக்க ஒரு ஃபன் நிகழ்ச்சியாக கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ஒரு பரபரப்பான குக்கிங் ஷோவாக இருந்தாலும் இதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. சமைக்கவே தெரியாத கோமாளிகளை வைத்துக் கொண்டு குக்குகள் படும் பாடு பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கும். முதல் சீசனிலேயே ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ என பெயர் எடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது.

26
டைட்டில் வின்னர்ஸ்
Image Credit : Vijay TV You Tube

டைட்டில் வின்னர்ஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது சீசனில் கனி திருவும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா டைட்டில் ஜெயித்தார். பின்னர் நடந்த நான்காவது சீசனில் மைம் கோபி டைட்டில் வென்றார். குக் வித் கோமாளி வரலாற்றில் டைட்டில் ஜெயித்த முதல் ஆண் போட்டியாளர் இவர் தான். இதையடுத்து நடைபெற்ற ஐந்தாவது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டேவும், ஆறாவது சீசனில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனும் டைட்டிலை தட்டிச் சென்றனர். தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

Related Articles

Related image1
இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கும்! குக் வித் கோமாளி 7-ல் ரோஜா என்ட்ரி.. 100% எண்டர்டெய்ன்மெண்ட் உறுதி!
Related image2
விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!
36
அதிரடி மாற்றம்
Image Credit : Vijay TV You Tube

அதிரடி மாற்றம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 4 சீசன் சக்கைப்போடு போட்டன, அதற்கு முக்கிய காரணம் அந்த நான்கு சீசன்களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அவர்கள் ஐந்தாவது சீசனில் இருந்து விலகிவிட்டார்கள். அதன்பின்னர் நடந்த ஐந்தாவது சீசன் உப்பு சப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், இறுதியாக மணிமேகலை, பிரியங்கா உடன் சண்டைபோட்டு அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சம்பவம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாற்றி, அந்த சீசன் ஒரு சர்ச்சையான சீசனாகவே முடிவுக்கு வந்தது. அந்த சீசனோடு மணிமேகலையும் விலகினார்.

46
ஜட்ஜ் ஆக வரும் ரோஜா
Image Credit : Vijay TV You Tube

ஜட்ஜ் ஆக வரும் ரோஜா

அதேபோல் 4வது சீசன் வரை பயணித்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் விலகி சன் டிவிக்கு சென்றதால், அவருக்கு பதில் கடந்த இரண்டு சீசன்களாக மாதம்பட்டி ரங்கராஜும், செஃப் தாமுவும் நடுவர்களாக இருந்து வந்தார்கள். கடந்த சீசனில் செஃப் கெளஷிக்கும் இணைந்தார். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் மேலும் ஒரு நடுவரை களமிறக்கி உள்ளனர். அவர் வேறுயாருமில்லை, நடிகை ரோஜா தான். இவரும் இந்த சீசனில் இருந்து நடுவராக பணியாற்றுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதோடு இந்த சீசன் முதல் ஆங்கரையும் மாற்றி உள்ளனர்.

56
ஓஜி ஆங்கர் யார்?
Image Credit : X

ஓஜி ஆங்கர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஷாலின் சோயா, தற்போது 7-வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். அவர் ரக்‌ஷன் உடன் சேர்ந்து இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரக்‌ஷன் இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஓஜி ஆங்கர் வருகிறார் என பில்டப் கொடுத்து வந்தது விஜய் டிவி. தற்போது அந்த ஓஜி ஆங்கர் யார் என்பதை ரிவீல் செய்துள்ளனர். அதன்படி மா கா பா ஆனந்த் தான் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என அறிவித்துள்ளனர்.

66
ஜோடியாக களமிறங்கும் குக்குகள்
Image Credit : X

ஜோடியாக களமிறங்கும் குக்குகள்

இதுவரை சிங்கிள் குக்குகளுடன் நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி, இந்த சீசனில் டபுள் குக்குகளுடன் நடைபெற இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் பிரபலம் கானா வினோத் அவரது மனைவி உடன் பங்கேற்கிறார். அதேபோல் பாடகர் மனோவும் அவரது மனைவியும் ஒரு டீம் ஆக களம் இறங்குகின்றனர். இதுதவிர கிரிக்கட்டர் அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சம்யுக்தா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். மேலும் அய்யனார் துணை சீரியல் நடிகர் அரவிந்த் சேஜு தன் மனைவி சங்கீதா உடன் களமிறங்குகிறார். இதனால் இந்த சீசன் தூள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ஈஸ்வரி உடன் அவுட்டிங் சென்ற குணசேகரன்.... வயிற்றெரிச்சலில் ஜனனி எடுக்கும் முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!
Related Stories
Recommended image1
இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கும்! குக் வித் கோமாளி 7-ல் ரோஜா என்ட்ரி.. 100% எண்டர்டெய்ன்மெண்ட் உறுதி!
Recommended image2
விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved