- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரூ.10 லட்சம் முதலீடு – கதிரின் டிராவல்ஸ் கனவை நிறைவேற்றி வைத்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
ரூ.10 லட்சம் முதலீடு – கதிரின் டிராவல்ஸ் கனவை நிறைவேற்றி வைத்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Kathir Travels Business Comes True in Pandian Stores 2 Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிரின் டிராவல்ஸ் கனவை அவரது அப்பா பாண்டியன் ரூ.10 லட்சம் கொடுத்து நிறைவேற்றி வைத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தனது சொந்த முயற்சியால் இப்போது டிராவல்ஸ் பிஸினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். டிராவல்ஸ் வைப்பதற்காக எல்லா பிளானும் சரியாக இருந்தாலும் அவரிடம் போதுமான பணம் இல்லை. இதற்காக நண்பர்களிடம் கேட்டும் பலனில்லை. வங்கி லோனும் கிடைக்கவில்லை. ராஜீயும் தன்னுடைய நகையை அடமானம் வைக்க சென்ற இடத்தில் சித்தப்பாவிடம் மாட்டிக் கொண்டார். டான்ஸ் போட்டியின் மூலமாக ரூ.10 லட்சம் ஜெயித்துவிடலாம் என்று சென்னை சென்ற இடத்தில் பிரச்சனையில் சிக்கி அதன் பின்னர் கதிர் வந்து காப்பாற்றும் நிலை ஏற்பட்டது.
இட்லி சுட பொறந்த மாதிரியே.. ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆனதா இட்லி கடை டிரெய்லர்?
ரூ.10 லட்சம் முதலீடு
கடைசியாக பாண்டியன் தான் தனது நிலத்தை விற்று கதிருக்கு டிராவல்ஸ் வைக்க ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அதன் பின்னர், டிராவல்ஸ்க்கான அலுவலகத்தை அண்ணன் சரவணன் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால், என்ன வாடகை தான் ரூ.10 ஆயிரம். இருந்தாலும் ஓகே என்று சொல்லிவிட்டார். கார் நிறுத்தி வைக்க போதுமான இட வசதியும் இருக்கிறது.
செகண்ட் ஹேண்ட் கார் - 2
ஏற்கனவே டிராவல்ஸ்க்கான காரையும் கதிர் பார்த்து வைத்துவிட்டார். இப்போது ரெண்டு கார், செகண்ட் ஹேண்ட் கார் தான். இருந்தாலும் ஓகே என்று சொல்லிருக்கிறேன் என்றார். அதோடு அந்த காரில் தான் தனது தங்கை அரசியை கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், டிரைவர்களும் பழைய அலுவலகத்திலிருந்து 2 பேர் வருகிறார்கள். ஆகையால், இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. டிராவல்ஸ் ஆரம்பித்துவிட்டால் அப்படி ஓடும். இனி கடைக்கு பெயிண்ட் அடிக்க வேண்டியது தான்.
Kalki 2: சுமதி பாத்திரத்தில் யார்? அனுஷ்காவுக்கு போட்டியாக வந்த நடிகைகள்!
அலுவலகம் திறப்பு விழா எப்போது?
கதிருக்கான டிராவல்ஸ் வைக்கும் பிளான் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இனி வரும் வாரங்களில் டிராவல்ஸ் ஆபிஸ் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிராவல்ஸ்க்கு என்ன பெயர் என்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர். அதில், ராஜீ பெயர், கோமதி பெயர், குலசாமி பெயர் என்று வரிசையாக எல்லோரும் ஒவ்வொரு பெயராக சொன்ன நிலையில் டிராவல்ஸ்க்கு என்ன பெயர் வைப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரொமான்டிக் படத்தால் காதலில் விழுந்த ஹீரோ-ஹீரோயின்; யார் தெரியுமா?