- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!
கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!
Karthigai Deepam Serial Today 1169th Episode Highlights: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1169ஆவது எபிசோடில் கார்த்திக்கை பார்க்க நினைத்த ரேவதி திடீரென்று மயக்கமடைந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Karthigai Deepam today 1169th episode Highlights
Karthigai Deepam Serial Today 1169th Episode Highlights: கார்த்திகை தீபம் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக தலையில் அடிபட்ட நிலையில் ரேவதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது. அதுவும் 2, 3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்துவிட்டது. உண்மையில் அப்படி நடக்குமா என்றால் சீரியலில் அப்படியெல்லாம் நடக்கிறது. என்ன செய்வது, வேறு வழியில்லாமல் சீரியலில் என்ன ஒளிபரப்பு செய்கிறார்களோ இல்லை இல்லை இயக்குநரின் ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாம் தொலைக்காட்சியில் ஒரு தொடராக பார்க்க முடியும்.
கார்த்திக் மற்றும் ரேவதி இடையிலான எமோஷனல் டிராமா
கொஞ்ச நாள், ரேவதி மற்றும் கார்த்திக்கை பிரித்து வைத்தார்கள். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். இப்போது கார்த்திக் யார் என்று தெரியாமலும், தனக்கு திருமணம் நடந்தது பற்றியும் ரேவதிக்கு நினைவில் இல்லை. இதை வைத்து ரேவதி மற்றும் கார்த்திக்கை பிரிக்க சாமுண்டீஸ்வரி திட்டமிட்டுள்ளார். சந்திரகலாவும் எப்படியாவது கார்த்திக்கை வீட்டை விட்டு விரட்டிவிடலாம் என்று திட்டமிட்டநிலையில், ரேவதிக்கு இந்த நிலைமைக்கு கார்த்திக் தான் காரணம் என்று சொல்லி அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டார் சாமுண்டீஸ்வரி.
கார்த்திகை தீபம் நாளை எபிசோட் ஸ்பாய்லர்
மேலும், ரேவதியிடம் தான் யார் என்ற உண்மையை சொல்லக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். ஆனால், அவருக்கு ஆழ்மனதில் கார்த்திக் பற்றிய சுயநினைவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் கோயிலில் கார்த்திக் அவரை பார்க்கும் போது தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1169ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
50 வயதிலும் ராணி போல் ஜம்முனு வாழும் சிம்ரன்... அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதிக்கு என்ன ஆனது?
பக்கத்து ஊரிலுள்ள ஒரு கோயிலுக்கு வந்த ரேவதி அங்கு ஊர் மக்கள் அனைவரும் கார்த்திக் பற்றி பேசவே, அவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். கார்த்திக் வெறும் பெயர் மட்டுமல்ல, அந்த ஊருக்கே காவல் தெய்வம், ஊர் மக்களுக்கு குலசாமியாக இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரேவதி அவர் யார் என்று ஊர் மக்களிடம் கேட்க, அவர்களும் அடையாளம் காட்டினர்.
ரேவதியைக் காப்பாற்றும் கார்த்திக்
இதைத் தொடர்ந்து கார்த்திக்கை நோக்கி நடந்து சென்று பின்பக்கமாக அவரை தொடவே ரேவதியின் மூளையில் கார்த்திக் பற்றிய சுயநினைவு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் குழப்பம் அடைந்து மயங்கி விழுந்துள்ளார். ரேவதியை பார்த்த கார்த்திக் உடனே அவரை தூக்கி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதன் பின்னர் மயில்வாகனத்திற்கு ரேவதியை பற்றி தெரியப்படுத்த அவர் தனது மாமியார் சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்தினார்.
கார்த்திக் ரேவதி சீரியல் அப்டேட்
உடனே மருத்துவமனைக்கு மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் புறப்பட்டு வரவே, சாமூண்டீஸ்வரியும் புறப்பட்டு வந்துள்ளார். மயில்வாகனம், என்ன நடந்தது என்பது பற்றி தனது மாமியாரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அமைதியானார். அவனால் தான் ரேவதிக்கு இந்த நிலைமை என்று கூறி ரேவதியை டிஸ்ஜார்ஜ் செய்ய எண்ணினார். மருத்துவரும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றனர். அங்கிருந்த நர்ஸிடம் தான் மயக்கம் அடைந்தது நினைவில் இருக்கிறது. தன்னை இங்கு கொண்டு வந்தது யார் என்று கேட்க, அவரும் கார்த்திக் தான் உங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
பிறகு மருத்துவரிடம் உங்களுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகு தான் அவர் இங்கிருந்து புறப்பட்டு சென்றார் என்று கூறினார். நான் யாரை பார்க்க நினைத்தேனோ அவர் தான் தன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். எப்படியும் அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், கார்த்திக்கின் அம்மா சிலையை தனது அம்மா தான் சிறந்து வைத்திருப்பதை அறிந்து கொண்ட ரேவதி, அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார். இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.