MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டை விட்டு வெளியேறும் கோமதி, பாண்டியனை தன் பின்னாலேயே லோ லோவென அலையவிட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 04 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியிடம் பேசாமல் இருந்த பாண்டியன், அவர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர், அவரிடம் பறிந்து பேசி வருகிறார். ஆனால் அவரை லேசாக மன்னித்துவிடக் கூடாது என முடிவு செய்யும் கோமதி, தன் பங்கிற்கு அவரிடம் சற்று கறாராக நடந்து கொள்கிறார். மறுபுறம் காந்திமதி, மீனா ஆகியோரும் கோமதிக்கு சப்போர்டாக செயல்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கோமதி தான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறி மீண்டும் பாண்டியனை பயமுறுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வீட்டை விட்டு வெளியேறிய கோமதி
Image Credit : jiohotstar

வீட்டை விட்டு வெளியேறிய கோமதி

கோமதி வீட்டை விட்டு வெளிய போறேன் என்று சொன்னதை வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. என்னம்மா காமெடி பண்ணிட்டு இருக்க, மறுபடியும் டிராமா போட போறியா என எல்லோரும் கிண்டலடிக்கிறார். இதனால் கடும் கோபம் கொள்ளும் கோமதி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். கோமதி வெளியேறியதைப் பார்த்ததும், ராஜியும், அரசியும் அவரை தடுத்து நிறுத்த செல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்காத கோமதி விறுவிறுவென நடையை கட்டுகிறார். உடனே சரவணன், நான் போய் அம்மாவை அழைச்சிட்டு வர்றேன் என சொல்லி கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்திவிடுகிறார்.

Related Articles

Related image1
சரவணன் - அஞ்சலி காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பாண்டியன் - எதிர்பாரா ட்விஸ்ட் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Related image2
கோமதி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்; கதறி அழுத பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
பின்னாடியே செல்லும் பாண்டியன்
Image Credit : jiohotstar

பின்னாடியே செல்லும் பாண்டியன்

அப்போது பேசும் கதிர், நீ எதுக்குனே போற, நமக்கு முன்னாடி அம்மாவுக்கு சொந்தம் அப்பா தான். அதனால, அப்பா போய் கூப்பிட்டா தான் அம்மா வருவாங்க. நம்ம அழைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால அப்பா போய் அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரச் சொல்லு என சொல்கிறார். இதையடுத்து கோமதியின் அம்மா காந்திமதி, பாண்டியனிடம், மாப்ள போய் அவளை கூட்டிட்டு வாங்க என சொன்ன உடன் வேறு வழியின்றி கோமதி பின்னாலேயே செல்கிறார் பாண்டியன். அவர் செல்லும் வழியில் தயவு செஞ்சு வீட்டுக்கு வந்துரு என கெஞ்சுகிறார். ஆனால் கோமதி கேட்கவில்லை.

45
செந்திலுக்கு செம டோஸ் கொடுத்த மீனா
Image Credit : jiohotstar

செந்திலுக்கு செம டோஸ் கொடுத்த மீனா

பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் கோமதி விறுவிறுவென நடந்து செல்கிறார். ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் பாண்டியனை வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் கோமதி பின்னாடியே கெஞ்சுகிட்டே போகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் செந்தில், மீனாவிடம் நீ தான் இப்படி ஒரு ஐடியாவை அம்மாவுக்கு கொடுத்தியா என கேட்கிறார். இதனால் டென்ஷன் ஆகும் மீனா, உங்க அம்மா என சின்ன குழந்தையா நாங்க சொல்லி கொடுத்து செய்யுறதுக்கு, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பிட்டாங்க, அதுக்கு நான் என்ன பண்றது என செம டோஸ் கொடுக்கிறார்.

55
அடங்க மறுக்கும் கோமதி
Image Credit : jiohotstar

அடங்க மறுக்கும் கோமதி

இறுதியாக கோமதி ஒரு இளநீர் கடைக்கு சென்று இளநீயை வாங்கி குடித்துவிட்டு, காசு அவர்கிட்ட வாங்கிக் கோங்க என சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் காசை கொடுத்துவிட்டு, சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைக்கிறார் பாண்டியன். இளநீர் வாங்கி கொடுத்ததுக்காக நான் வீட்டுக்கெல்லாம் வர மாட்டேன் என சொல்லி மீண்டும் முரண்டு பிடிக்கிறார் கோமதி. இதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமால் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் பாண்டியன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Related Stories
Recommended image1
சரவணன் - அஞ்சலி காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பாண்டியன் - எதிர்பாரா ட்விஸ்ட் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image2
கோமதி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்; கதறி அழுத பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved