MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 8 மணி நேர ஆபரேஷன்; ஞாபக சக்தியை இழக்கும் ரேவதி; ஷாக்கான கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

8 மணி நேர ஆபரேஷன்; ஞாபக சக்தியை இழக்கும் ரேவதி; ஷாக்கான கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

Karthigai Deepam Serial 1163rd Episode Highlights: கார்த்திகை தீபம் சீரியலில் 1163ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 29 2026, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திக்கின் பேச்சை கேட்காமல் வெளியில் சென்று கார் விபத்தில் சிக்கிய ரேவதி இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால், அவர் கண்ணை மூடாமல் இருப்பதால், ஆபரேஷன் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து ரேவதியின் அம்மா, அப்பா, தங்கச்சி, அக்கா என்று எல்லோரும் எவ்வளவு முயற்சி செய்தாலும் ரேவதி கண்ணை மூடவில்லை. ஆனால், கார்த்திக் அவருடன் பேசவே ரேவதி கண்ணை மூடினார்.

விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!

28
Karthigai Deepam Serial Update Today
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Update Today

இதைத் தொடர்ந்து ரேவதிக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை சார்பில் கார்த்திக்கிடம் கையெழுத்து வாங்க சென்ற போது சந்திரகலா மருத்துவரை தடுத்து நிறுத்தி, என்னுடைய அக்கா தான் எல்லாமே. அவர்தான் கையெழுத்திட வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். ஆனால், மருத்துவர் திட்டவட்டமாக நோயாளியின் கணவர் தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறவே, கார்த்திக்கும் கையெழுத்திட ரேவதிக்கு ஆபரேஷன் நடந்தது.

38
Karthigai Deepam Serial Today 1163th Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today 1163th Episode

ஒருபுறம் ரேவதிக்கு ஆபரேஷன் நடக்கவே, கார்த்திக் சித்தரை பார்க்க சென்றார். அவரது முகத்தை வைத்தே சித்தர் என்ன நடந்தது என்பதை கணித்துவிட்டார். இருந்த போதிலும், நடப்பதெல்லாம் காலத்தின் கட்டாயம். இனிமேலும், அப்படித்தான் நடக்கும். நீ செய்த தான தர்மம், உன்னுடைய முன்னோர்கள் செய்த தான தர்மம் எல்லாமே உன்னுடைய மனைவியின் உயிரை காப்பாற்றும். உயிரி பிழைத்து வந்தாலும் உனக்கு சோதனை இருக்கிறது என்று சித்தர் சூட்சமமாக கார்த்திக்கிற்கு உபதேசித்தார்.

48
Karthigai Deepam Serial 1163rd Episode Highlights
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial 1163rd Episode Highlights

இனிமேல் வாழ்க்கையில் நீ எதிர்பாராத பல விஷயங்கள் நடக்க போகிறது. அதற்கு நீ உன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விளக்கமாக சொல்ல முடியாது. இனி வரும் காலங்களில் எக்காரணத்தை கொண்டு உன்னுடைய மனைவியை பிரிந்துவிடாதே. உனக்கு என்ன அவமானம் நடந்தாலும், மனைவிக்காக தாங்கிக் கொள்ள வேண்டும். என்ன சூழல் வந்தாலும் உன்னுடைய மனைவியை கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்கு நான் அவரை விட்டு பிரியவேமாட்டேன்.

58
Karthigai Deepam Today Episode Review
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Today Episode Review

அப்படியே பிரிவது போன்று சூழல் வந்தாலும் அவருடன் இருப்பது போன்று சூழலை உருவாக்கி எப்போதும் அவருடன் இருப்பேன் என்றார். குடும்பமே ரேவதியை நினைத்து கதறும் போது சந்திரகலா மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அவளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பது போன்று கூலாக இருந்தார். அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தனது கணவரையும் மாமாவையும் சந்தித்து பேசினார். மேலும் நீங்கள் ஏதாவது இப்படி செய்தீர்களா என்று கேட்டார். அதற்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறினர்.

68
Karthik Shock Movements
Image Credit : Zee Tamil You Tube

Karthik Shock Movements

இதற்கிடையில் ரேவதிக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. 8 மணி நேரம் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு ரேவதியின் குடும்பத்தினரை சந்தித்த மருத்துவர்கள், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், ஆபரேஷன் செய்யும் போது தான் கவனித்தோம், தலையில் அடிபட்ட நிலையில் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் திடீரென்று மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அவர்களது ஞாபகசக்தியை கூட பாதிக்கும். ஞாபகங்களை நினைவில் வைத்துக் கொள்ள கூடிய மூளையின் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆபரேஷன் செய்யும் போது கவனித்தோம்.

78
Revathi Accident and Operation
Image Credit : Zee Tamil You Tube

Revathi Accident and Operation

அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பு அவர்கள் கண் விழித்து பார்த்த பிறகு தான் எங்களால் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூற கார்த்திக் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். ரேவதி கண்விழித்து வந்த பிறகு கார்த்திக்கை பார்த்து யார் என்று கேட்கும் சூழல் உருவாகும் என்று தெரிகிறது. அதோடு, ரேவதிக்கு இருக்கும் இந்த பிரச்சனையை வைத்து கார்த்திக் மற்றும் ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் சதி செய்யலாம்.

88
Revathi Memory Loss Plan
Image Credit : Zee Tamil You Tube

Revathi Memory Loss Plan

அதே போன்று சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரியால் இனி கார்த்திக் அடுத்தடுத்து அவமானங்களை சந்திக்கும் சூழல் உருவாகலாம் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? டாப் 10 வசூல் படங்களின் முழு விபரம்

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
கதற கதற சாட்டையடி வாங்கிய ரோகிணி; சந்தோஷத்தில் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved