- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தர்ஷன் திருமணத்தில் சிக்கல்?... பார்கவிக்கு ஜீவானந்தம் கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ் - எதிர்நீச்சல் 2 அப்டேட்
தர்ஷன் திருமணத்தில் சிக்கல்?... பார்கவிக்கு ஜீவானந்தம் கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ் - எதிர்நீச்சல் 2 அப்டேட்
புலிகேசி டீமிடம் இருந்து எஸ்கேப் ஆன ஜீவானந்தம், பார்கவியின் திருமணத்திற்காக சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தத்தை சுட்டுப் பிடிக்கும் உத்தரவு கிடைத்ததால் அவரை வலைவீசி தேடி வந்த புலிகேசிக்கு, அவர் கொடைக்கானலில் இருப்பது தெரியவருகிறது. உடனே அவரை சேஸ் பண்ணி வருகிறார் புலிகேசி. இதுதெரியாமல் பார்கவிக்காக ஒரு டீ கடையில் பிஸ்கட் வாங்க செல்கிறார் ஜீவானந்தம். அதே டீ கடைக்கு புலிகேசி மற்றும் அவரது குழுவினரும் வர, அங்கிருந்து பிஸ்கட்டை கூட வாங்காமல் தலைதெறிக்க ஓடிவிடுகிறார் ஜீவானந்தம். பின்னர் அங்கிருந்த பையன் அவரை கூப்பிடுவதை பார்த்த போலீஸ், அந்த ஆள் இவரை மாதிரி இருப்பாரா என ஒரு போட்டோவை காட்டி கேட்க, அதற்கு அந்த சிறுவனும் இவரே தான் என சொல்கிறார். உடனே புலிகேசி, ஜீவானந்தத்தை துரத்தி செல்கிறார்.
எஸ்கேப் ஆன ஜீவானந்தம்
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பான சேஸிங் காட்சிகளின் முடிவில் புலிகேசியிடம் இருந்து தப்பித்துவிடுகிறார் ஜீவானந்தம். பின்னர் காட்டு வழியே பார்கவி உடன் நடந்து செல்லும் அவர், கொடைக்கானலில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பார்கவியை அழைத்து செல்கிறார். அங்கு இருவரும் தலைமறைவாக இருக்கின்றனர். அப்போது பார்கவியிடம் பேசும் ஜீவானந்தம், இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது. அந்த புலிகேசி எப்படியாவது மோப்பம் பிடிச்சு வந்துவிடுவான். அதற்குள் நாம் கிளம்ப வேண்டும் என சொல்கிறார். அதற்கு பார்கவியும் சம்மதிக்க அவரிக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுக்கிறார் ஜீவானந்தம்.
பார்கவிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்
அதன்படி கையில் பட்டுப் புடவை மற்றும் நகையை எடுத்து நீட்டும் ஜீவானந்தம், இதெல்லாம் நான் உன்னுடைய கல்யாணத்துக்காக வாங்கியது. இதை அணிந்துகொண்டு நீ தர்ஷனை திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என சொல்கிறார். இதைக்கேட்டதும் பார்கவி எமோஷனல் ஆகிறார். மறுபுறம் தர்ஷன் - அன்புக்கரசியின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. வீட்டில் இருந்து அனைவரும் திருமண மண்டபத்துக்கு கிளம்ப, ஜனனியை அழைத்து செல்லலாம் என சொல்கிறார் விசாலாட்சி, இதைக்கேட்டு டென்ஷன் ஆன ஆதி குணசேகரன், அவ வரக் கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார்.
அடுத்து நிகழப்போவது என்ன?
திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பதை அப்டேட் செய்ய ரேணுகா மற்றும் நந்தினியை அங்கு அனுப்பி வைத்த ஜனனி, ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சக்தி உடன் கிளம்புகிறார். தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது? பார்கவி உடன் வந்து தர்ஷன் - அன்புக்கரசியின் திருமணத்தை தடுத்து நிறுத்துவாரா ஜீவானந்தம்? ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரம், வெளிவருமா? ஈஸ்வரி கண்விழிப்பாரா? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.