- Home
- Cinema
- தொலைக்காட்சி
- என்கவுண்டர் செய்ய மோப்பம் புடிச்சு வந்த புலிகேசி; எஸ்கேப் ஆனாரா ஜீவானந்தம்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
என்கவுண்டர் செய்ய மோப்பம் புடிச்சு வந்த புலிகேசி; எஸ்கேப் ஆனாரா ஜீவானந்தம்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவியுடன் தலைமறைவாக இருக்கும் ஜீவானந்தத்தை புலிகேசி கண்டுபிடித்துவிடுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஈஸ்வரி கண்விழித்தால் தன்னுடைய அண்ணனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை போட்டுத்தள்ள பிளான் போட்டு வருகிறார் கதிர். அதன் முதல் படியாக ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரை புடித்து, அவரிடம் ஈஸ்வரியின் அறைக்கு சென்று, அவரை கொலை செய்யச் சொல்கிறார். அதைக்கேட்டு அந்த நபரும், ஈஸ்வரியின் அறைக்கு நர்ஸ் ஒருவரின் துணையோடு செல்ல முயலும் போது டாக்டர் மற்றும் கொற்றவை அவர்களை தடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் பிளான் சொதப்பிவிடுகிறது.
தர்ஷனின் திருமண வேலைகள் ஆரம்பம்
மறுபுறம் வீட்டில் தர்ஷனின் கல்யாண ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெறுகிறது. அப்போது தர்ஷனின் கல்யாணத்திற்கு நிச்சய புடவை எடுத்து வந்ததாக நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி ஆகியோர் கூற, இதெல்லாம் எதுக்கு நீங்க செய்றீங்க என கேட்கிறார் அறிவுக்கரசி. அப்போது அவரிடம் வந்து, ஏன்னா தர்ஷன் கல்யாணம் செஞ்சுக்க போறது பார்கவியை என சொல்கிறார் ஜனனி. இதனால் அறிவுக்கரசியும் ஷாக் ஆகிறார். அன்புக்கரசி கொடுத்த வசிய மருந்தால் தர்ஷன் மயக்க நிலையிலேயே இருக்கிறார். அவரை தன்னுடைய கண்ட்ரோலிலேயே வைத்திருக்கிறார் அன்புக்கரசி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜீவானந்தத்தை துரத்தும் புலிகேசி
ஜீவானந்தமும், பார்கவியும் மலைப்பிரதேசம் ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்களை போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறது. உடனே புலிகேசிக்கு தகவல் கிடைக்க, அவர் ஜீவானந்தத்தை சுட்டுப் பிடிக்க துரத்துகிறார். போலீஸ் துரத்தி வருவதை அறிந்து பார்கவி, ஜீவானந்தம் இருவரும் காரில் தப்பிக்க முயல்கிறார்கள். மறுபுறம் வீட்டில் இருந்து ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளுடன் மண்டபத்துக்கு கிளம்புகிறார். அப்போது நந்தினியையும் அவர்களுடன் மண்டபத்துக்கு கிளம்பி செல்லச் சொல்லும் ஜனனி, அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?
பார்கவியையும், ஜீவானந்தத்தையும் புலிகேசி துரத்தி பிடித்து என்கவுண்டர் செய்தாரா? இல்லை இருவருமே அவரிடம் இருந்து தப்பித்தார்களா? தர்ஷனுக்கு பார்கவியை கல்யாணம் செய்து வைக்க திட்டமிடும் ஜனனியின் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? ஆஸ்பத்தியில் ஈஸ்வரியை கொலை செய்ய நடக்கும் சதியை, கொற்றவை தடுப்பாரா? ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஆதாரம் ஜனனியிடம் சிக்குமா? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.