- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனியின் கதி என்ன? வேட்டையாட களமிறங்கும் கொற்றவை - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம சம்பவம் வெயிட்டிங்
ஜனனியின் கதி என்ன? வேட்டையாட களமிறங்கும் கொற்றவை - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம சம்பவம் வெயிட்டிங்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ரெளடிகளிடம் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை காப்பாற்றும் முனைப்போடு களத்தில் இறங்கி உள்ளார் கொற்றவை. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை பினாமி குமாரின் ஆட்கள் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர்களை அடித்துப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினார் ஜனனி. பின்னர் அவரை துரத்திச் சென்ற ரெளடிகள், பினாமி குமாரிடம் தாங்கள் ஜனனியை கொன்றுவிட்டதாக கூறி இருக்கிறார்கள். ஏனெனில் ஜனனி தப்பித்துவிட்டார் என்கிற உண்மை தெரிந்தால் கொன்றுவிடுவார் என்பதால் அவரிடம் பொய் சொல்லிவிட்டு ஜனனியை மீண்டும் வலைவீசி தேடத் தொடங்குகிறார்கள். அவர்களிடம் சிக்காமல் இருக்க ஜனனி முயல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜனனியை துரத்தும் ரெளடிகள்
ஜனனி அந்த ரெளடிகளிடம் இருந்து தப்பிக்க மரக்கிளை ஒன்றில் ஏறி நிற்கிறார். அப்போது கால் தவறி அந்த மரத்தில் இருந்து கீழே விழும் ஜனனி, அய்யோ... அம்மா என வலியால் கத்த, அந்த ரெளடிகளும் சத்தம் கேட்டு ஓடி வருகிறார்கள். பின்னர் அந்த வலியோடு அங்கிருந்து தப்பிச் செல்லும் ஜனனி, ஒரு மோட்டார் அறையில் பதுங்குகிறார். அந்த மோட்டார் அறைக்கு வரும் அந்த இடத்தின் ஓனர், அதை பூட்டு போட்டு லாக் பண்ணுகிறார். பின்னர் அங்கு வரும் ரெளடிகள் இங்க ஏதாச்சும் பொண்ணு வந்துச்சா என கேட்கிறார்கள்.
காப்பாற்றப்படும் ஜனனி
அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் யாரும் வரல என சொல்ல, அந்த ரூமை ஓபன் பண்ணு நாங்க பார்க்கணும் என கூறுகிறார். ஆனால் அந்த ஓனர் ரூமை திறக்க மறுக்கிறார். இதனால் அந்த ரெளடிகள் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்கள். பின்னர் அந்த ஓனர் ரூம் கதவை திறந்து யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க, உள்ளே ஜனனி இருப்பது தெரியவருகிறது. அநேகமாக அந்த நபரின் உதவியுடன் ஜனனி தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
வீட்டில் நடக்கும் பிரச்சனை
மறுபுறம் வீட்டில் விசாலாட்சியிடம் பிரச்சனை பண்ணும் கதிர் மற்றும் ஞானம், நாங்க வந்த அன்னைக்கே சொன்னோம்ல, இவங்கெல்லாம் அடங்குற மாதிரி தெரியல. நாங்க முடிவெடுத்து இப்போ தெளிவா சொல்றோம். எங்களுக்கு இவங்க வேண்டாம். இவங்களை முடிச்சுவிடப்போறோம் எனக் கூறுகிறார். இதைக்கேட்ட விசாலாட்சி பேரதிர்ச்சி அடைகிறார். அண்ணன் இல்லாதபோது அடங்கிக் கிடந்த ஞானம் தற்போது ஆதி குணசேகரன் வந்ததும் தாம் தூம் என குதிப்பதை பார்த்த ரேணுகா கடும் கோபமடைகிறார்.
கொற்றவையை சந்திக்கும் சக்தி
ஜனனியை தேடி அலையும் சக்தி, கொற்றவையை சந்தித்து பேசுகிறார். ஜனனி எதாச்சும் ஆபத்தில் சிக்கி இருப்பாளோனு பயமா இருக்கு என சொல்கிறார். உங்களோட பயம் எனக்கு புரியுது சக்தி. ரொம்ப தெளிவா திட்டம்போட்டு இதை பண்ணிருக்காங்க. அவங்களை சும்மா விடக் கூடாது என கூறுகிறார். அநேகமாக ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கினால் அவர்களை வேட்டையாட காத்திருக்கிறார் கொற்றவை. இதையடுத்து என்ன நடக்கப்போகிறாது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

