- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சென்னையில் காத்துவாக்குல காதல் செய்யும் கதிர் - ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
சென்னையில் காத்துவாக்குல காதல் செய்யும் கதிர் - ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முழுக்க கதிர் மற்றும் ராஜியின் ரொமான்ஸ் காட்சிகள் தான் நிரம்பி வழிந்துள்ளன. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிரும், ராஜியும் சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். கதிரின் நண்பர்கள் இருவர் தான் அவர்களுடன் காரில் செல்கிறார்கள். அவர்களும் வேலை விஷயமாக தான் கதிருடன் காரில் செல்கிறார்கள். செங்கல்பட்டு வரை கார் ஓட்டி வரும் கதிரின் நண்பர்கள், அங்கு தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி இறங்குகிறார்கள். இதையடுத்து கதிர் தான் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ஒருவழியாக இருவரும் சென்னையில் ரீச் ஆகிறார்கள். அங்கு ராஜி படிப்பதற்காக வந்திருக்கிறார். அவர் கோச்சிங் செண்டர் ஒன்றில் சேர இருப்பதால் தான் சென்னை வந்திருக்கிறார்.
சென்னைக்கு சென்ற கதிர் - ராஜி
ராஜி கோச்சிங் செண்டர் செல்லும் பகுதியிலேயே ஒரு சின்ன ஹோட்டல் இருக்கிறது. அங்கு தான் ரூம் எடுத்து கதிரும், ராஜியும் தங்குகிறார்கள். அங்கு சென்றதும் நான் ஃபிரெஸ் ஆகிட்டு வர்றேன் என்று கூறிவிட்டு ராஜி ரூமுக்கு சென்று குளித்துவிட்டு வருகிறார். அதற்குள் கதிர் காஃபி ஆர்டர் போட்டு ரெடியாக வைத்திருக்கிறார். அப்போது ராஜி குளித்துவிட்டு கூந்தல் ஈரத்தோடு வருவதை பார்க்கும் கதிர், ரொமான்ஸ் மூடுக்கு சென்றுவிடுகிறார்.
ராஜிக்கு கையில் காயம்
அவர் அப்படியே ராஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து காஃபி ஆறிப்போவதற்குள் இருவரும் குடிக்கலாம் என ராஜி சொல்ல, இருவரும் கிளாசில் ஊற்றி காபியை குடிக்கும்போது, தெரியாமல் ராஜியின் கையில் சூடான காஃபி கொட்டிவிடுகிறது. உடனே சூடு தாங்க முடியாமல் ராஜி வலியால் துடிக்கிறார். ராஜி வலியால் துடிப்பதை பார்த்து பதறிப்போன கதிர், உடனே ராஜியின் கையைப்பிடித்து காஃபி சிந்திய இடத்தில் ஊதுகிறார்.
துடிதுடித்துப் போன கதிர்
ராஜி எக்ஸாம் எழுத இருப்பதால், அந்த கையிலேயே காஃபி கொட்டிவிட்டதால் உன்னால் எக்ஸாம் எழுத முடியுமா என கேட்கும் கதிர், உனக்காக ஆயில்மெண்ட் வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என சொல்லும் ராஜி, அந்த அளவுக்கு பெரிய காயமெல்லாம் இல்ல, நான் எக்ஸாம் எழுதிடுவேன் என சொல்கிறார்.
ரொமான்ஸ் ஆரம்பம்
இரண்டு சொட்டு காஃபி தான் விழுந்துச்சு எனக்கு பெருசா வலிக்கல என சொல்கிறார் ராஜி. இதுக்கு போய் நீ என்ன இப்படி துடிக்குற என ராஜி கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல என சொல்லும் கதிர், ராஜியோட கையை பிடித்து மீண்டும் ரொமான்ஸ் பண்ண தொடங்குகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன ஆனது? ராஜி வெற்றிகரமாக தேர்வு எழுதினாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

