- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் அடிமட்டத்துக்கு சென்ற எதிர்நீச்சல் 2 - டாப் 10 சீரியல் பட்டியலில் செம ட்விஸ்ட்
TRP ரேஸில் அடிமட்டத்துக்கு சென்ற எதிர்நீச்சல் 2 - டாப் 10 சீரியல் பட்டியலில் செம ட்விஸ்ட்
2026-ம் ஆண்டின் 3வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் டாப்பில் இருந்து கடும் சரிவை சந்தித்து உள்ளது.

Top 10 Tamil Serial TRP Rating
சீரியல்களின் உயிர்நாடியாக கருதப்படுவது அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது என்பதை அதன் டிஆர்பியை வைத்து தான் கணிப்பார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியிடப்படும். அதன்படி 2026-ம் ஆண்டின் 3-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன தமிழ் சீரியல்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
டாப் 10ல் நியூ எண்ட்ரி
இந்த வாரம் 10வது இடத்தை சன் டிவியின் புத்தம் புது சீரியலான செல்லமே செல்லமே பிடித்துள்ளது. கடந்த வாரம் 10-ம் இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு 5.29 புள்ளிகள் உடன் செல்லமே செல்லமே சீரியல் டாப் 10க்குள் நுழைந்துள்ளது. கடந்த வாரம் 11-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் மளமளவென முன்னேறி 9-ம் இடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு டிஆர்பி ரேஸில் 5.96 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.18 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு பலத்த அடி
இந்த வாரம் 7-வது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. கடந்த வாரம் 7.92 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் மளமளவென சரிந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் வெறும் 7.43 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியலின் சரிவுக்கு அதன் கதைக்களம் தான் முக்கிய காரணம். அரைச்ச மாவையே அரைத்து வருவதால் ரசிகர்களுக்கு சலிப்புதட்டத் தொடங்கி உள்ளது. கடத்தல், தலைமறைவு, கைது என ஒரே பாணியை இயக்குநர் பின்பற்றி வருவதால் அதன் டிஆர்பியும் சரிவை சந்தித்துள்ளது.
முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை இந்த வாரம் 6-ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 7.72 புள்ளிகள் உடன் 7-வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.79 புள்ளிகளை பெற்று ஒரு இடம் முன்னேறி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 5-ம் இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் 5-ம் இடத்துக்கு தாவி உள்ளதோடு 7.77 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்று அசத்தி உள்ளது. நான்காம் இடத்தில் விஜய் டிவி சீரியலான அய்யனார் துணை உள்ளது. கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு தாவி உள்ளது.
டாப் 3ல் சன் டிவி தொடர்கள்
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான மருமகள், கயல் மற்றும் மூன்று முடிச்சு - சிங்கப்பெண்ணே மகா சங்கமம் முதல் மூன்று இடங்களைப் பிடித்து உள்ளன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள மருமகள் சீரியலுக்கு 8.60 புள்ளிகளும், இரண்டாம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 8.92 புள்ளிகளும் கிடைத்துள்ளன. மகாசங்கமமாக ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்கள் ஒட்டுமொத்தமாக 9.93 டிஆர்பி ரேட்டிங் உடன் முதல் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

