- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனியின் கதை முடிந்தது... ஆதி குணசேகரனின் அடுத்த டார்கெட் யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜனனியின் கதை முடிந்தது... ஆதி குணசேகரனின் அடுத்த டார்கெட் யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பினாமி குமாரின் ஆட்களால் கடத்தப்பட்டிருந்த ஜனனியின் கதையை முடித்துவிட்டதாக ரெளடிகள் சொல்லி உள்ளனர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குண்டாஸ் போடப்பட்டதால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஆதி குணசேகரன் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி குண்டாஸை கேன்சல் செய்ய வைத்ததோடு தற்போது ஜாமினிலும் வெளியே வந்துள்ளார். இதனால் அவர் வீட்டுக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவரின் கூட்டாளியான பினாமி குமார், ஜனனியை கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவரை தன்னுடைய ஆட்களை வைத்து கதையை முடிக்கவும் பிளான் போட்டு இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஷாக் ஆன சக்தி
ஜனனியை தேடி அலையும் சக்தி, வீட்டில் இருக்கும் நந்தினிக்கு போன் போட்டு ஜனனி எதாச்சும் போன் பண்ணினாலா என கேட்க, அவர் இல்லை என சொன்னதோடு, உங்க அண்ணன் வீட்டுக்கு வந்துட்டாரு என்கிற விஷயத்தையும் கூறுகிறார். இதைக்கேட்டு பதறிப்போன சக்தி, நான் ஜனனியை எப்படியாச்சும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர்றேன் என சொல்லிவிட்டு தீவிரமாக தேட ஆரம்பிக்கிறார். மறுபுறம் பினாமி குமாரின் ஆட்கள் அடித்ததால் மயக்கம் போட்டு விழுந்தது போல் நடித்த ஜனனி, அவர்களை திசை திருப்பிவிட்டு, அவர்கள் போனில் பேசியதையெல்லாம் ஒட்டுக்கேட்டு விடுகிறார்.
கொல்லப்படும் ஜனனி?
ஆதி குணசேகரன் ஜாமினி வெளியே வந்த விஷயமும் அந்த ரெளடிகள் பேசும் போது ஜனனிக்கு தெரியவருகிறது. அவர் வீட்டுக்கு சென்றதும், சொல்கிறேன், ஜனனியின் கதையை முடிச்சிடுங்க என பினாமி குமார் சொல்லி இருந்தார். இதையடுத்து அந்த ரெளடிகள் ஜனனி மயக்கத்தில் தான் இருக்கிறார் என நம்பி அங்கிருந்து வெளியே செல்கிறார்கள். அந்த கேப்பில் ஜனனி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். தப்பிச் சென்ற ஜனனியை அந்த ரெளடிகள் சேஸ் பண்ணி போகிறார்கள். அப்போது பினாமி குமார் போன் போட்டு முடிஞ்சதா என கேட்க, அந்த ரெளடிகளும் அண்ணேன் கதையை முடிச்சிட்டோம் என கூறுகிறார்கள்.
விசாலாட்சியை மிரட்டும் கதிர்
மறுபுறம் வீட்டில் பெண்களுக்கு சப்போர்டாக இருக்கும் விசாலாட்சியை மிரட்டும் கதிர், நீ இப்படியே பண்ணிகிட்டு இருந்தா உன்னை சுட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என மிரட்டுகிறார். அதைப்பார்த்து கடுப்பான நந்தினி, நீ ஆம்பளையா இருந்தா சுடுடா பாப்போம். பெத்த தாயையே இப்படி சுட்டுக் கொல்லுவேன்னு மிரட்டுற நீயெல்லாம் ஒரு மனுஷனா என திட்டுகிறார். இதையெல்லாம் அருகில் இருக்கும் ஆதி குணசேகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது. இதையடுத்து என்ன ஆனது? ஜனனி அந்த ரெளடிகளால் உண்மையிலேயே கொல்லப்பட்டாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

