MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • TRP ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலை ஓட ஓட விரட்டி புது வரலாறு படைத்த அய்யனார் துணை..!

TRP ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலை ஓட ஓட விரட்டி புது வரலாறு படைத்த அய்யனார் துணை..!

டிஆர்பி ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அய்யனார் துணை சீரியல் அதனை முந்தியதோடு, முதலிடத்தையும் தட்டிச் சென்றுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ayyanar Thunai Beats Siragadikka Aasai in TRP Race
Image Credit : instagram

Ayyanar Thunai Beats Siragadikka Aasai in TRP Race

விஜய் டிவி என்றாலே சிறகடிக்க ஆசை தான் என சொல்லும் அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக டிஆர்பி ரேஸில் தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தை பிடித்து வந்தது அந்த சீரியல். ஆனால் 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து சிறகடிக்க ஆசை சீரியல் சற்று சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. அதுவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிறகடிக்க ஆசை சீரியலை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு, அய்யனார் துணை சீரியல் முதலிடத்தை ஆக்கிரமித்து உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் 6-வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் டாப் 5 இடங்களை தட்டிதூக்கிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

26
1. அய்யனார் துணை
Image Credit : YouTube/vijaytelevision

1. அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியல் தான் இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு 8.87 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அந்த சீரியலுக்கு கிடைத்த அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் இதுவாகும். இந்த சீரியலில் சோழன் - நிலா விவாகரத்து, ராகவ்வை வீடு தேடி சென்று ராகவ் அடித்தது போன்ற எபிசோடுகள் மக்களிடையே அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன. நகர்புறங்களில் மட்டும் இந்த சீரியலுக்கு 9.3 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

Related Articles

Related image1
காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Related image2
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
36
2. சிறகடிக்க ஆசை
Image Credit : X/vijaytelevision

2. சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் 7.91 புள்ளிகள் உடன் 2-ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரியவந்த எபிசோடுக்கு அடுத்தபடியாக அவர் டைவர்ஸ் கேஸில் கோர்ட்டில் வாதாடிய எபிசோடு தான் ஓரளவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருந்தது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கும் மனோஜும் டைவர்ஸ் கிடைத்தால், அந்த எபிசோடு டிஆர்பியில் உச்சம் தொட வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைக்கு அது நடக்க வாய்ப்பில்லை.

46
3. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Image Credit : Instagram/VijayTelevision

3. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 6.43 டிஆர்பி ரேட்டிங் உடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் சரவணன் - தங்கமயில் இடையே வெடித்த மோதல் பெரியளவில் பேசுபொருளாக இருந்தது. அதன்பின்னர் இருவரும் டைவர்ஸ் கேஸ் என அழையத் தொடங்கியதும் டம்மியாக தொடங்கியது. தற்போது சரவணன் முன்னாள் காதலி அஞ்சலியோடு நெருங்கிப் பழகுவதால், அவர் மூலம் விரைவில் மிகப்பெரிய ட்விஸ்ட் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது டிஆர்பி உச்சம் தொடும்.

56
4. சின்ன மருமகள்
Image Credit : Instagram/vijaytelevision

4. சின்ன மருமகள்

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் சின்ன மருமகள். இந்த சீரியல் 5.86 டிஆர்பி புள்ளிகள் உடன் டாப் 5 பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலின் கதைக்களமும் போகப் போக சூடுபிடித்தால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கே டஃப் கொடுக்கலாம். இதன் டிஆர்பி ரேட்டிங் சரிவை சந்தித்துள்ளதற்கு அதன் நேரமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

66
5. அழகே அழகு
Image Credit : Instagram

5. அழகே அழகு

விஜய் டிவியில் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் அழகே அழகு. இதில் பிக் பாஸ் அன்ஷிதாவும், தொகுப்பாளினி நட்சத்திராவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த தொடருக்கு இந்த வாரம் 4.67 டிஆர்பி கிடைத்துள்ளது. இது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான சிந்து பைரவி, மகாநதி ஆகியவற்றைக் காட்டிலும் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இந்த வாரம் டிஆர்பி ரேஸில் 5-ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சரவணன் - அஞ்சலி இடையே கள்ளக்காதலா? நேரில் பார்த்து ஷாக் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Recommended image3
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Recommended image2
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved