- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விசாரணையில் திடீர் ட்விஸ்ட்... அதிரடியாக கைது செய்யப்படும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடு
விசாரணையில் திடீர் ட்விஸ்ட்... அதிரடியாக கைது செய்யப்படும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடு
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோடில் ஜனனி கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையை கையில் எடுத்துள்ள போலீஸ், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, குணசேகரனுக்கு தெரிந்தவர் என்பதால், விசாரணை தற்போது ஜனனி பக்கம் திரும்பி இருக்கிறது. அவர் ஜனனியை விசாரிக்க மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது அங்கு தர்ஷினியும் இருக்கிறார். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். தர்ஷினி ஈஸ்வரிக்கு என்ன நடந்தது என்பதை விவரமாக கூறுகிறார்.
ஜனனியிடம் விசாரணை நடத்தும் போலீஸ்
இறுதியாக குணசேகரன் தான் இதை செய்திருப்பார் என்று தர்ஷினி சொல்ல, அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று போலீஸ் கேட்கிறார். பின்னர் டாக்டரிடமும் விசாரணை நடைபெறுகிறது. அப்போது ஈஸ்வரியின் உடல்நிலையில், மாற்றம் ஏற்பட்டதை கூறுகிறார். யாரோ அவரது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறினார். இதையடுத்து ஜனனி ஜீவானந்தம் இங்கு இருந்ததை பற்றி தெரிவிக்கிறார். இதனால் போலீசுக்கு ஜீவானந்தம் மீது சந்தேகம் எழுகிறது. உடனடியாக அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட விரைகிறது போலீஸ். அப்போது அவர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி காத்திருக்கிறது.
சிசிடிவி காட்சியால் நடந்த ட்விஸ்ட்
பார்கவி ஈஸ்வரியை பார்க்க அவரது அறைக்கு சென்றது அந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில் பார்கவியை அழைத்துக் கொண்டு ஜீவானந்தம் அங்கிருந்து ஓடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. இதனால் ஜீவானந்தமும், பார்கவியும் தான் ஈஸ்வரியை ஏதோ செய்திருக்கிறார்கள் என போலீசுக்கு சந்தேகம் வருகிறது. இப்படி திடீரென போலீஸ் விசாரணை தங்கள் பக்கம் திரும்ப என்ன காரணம் என்பது தெரியாமல் இருக்கிறார் ஜனனி. ஆதி குணசேகரனின் சூழ்ச்சி ஜனனியை ஒரு குற்றவாளியாக மாற்றி இருக்கிறது. இதனால் போலீஸ் ஜனனியை அழைத்துக் கொண்டு வீட்டில் விசாரணை நடத்த செல்கிறார்கள்.
கைது செய்யப்படும் ஜனனி
அங்கு இருக்கும் ஆதி குணசேகரன், இவளுகளும், அந்த ஜீவானந்தமும் சேர்ந்துக்கிட்டு என்னுடைய குடும்பத்தை காலிபண்ண திட்டமிடுகிறார்கள் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் ஆதி குணசேகரன். அந்த சமயத்தில் ஜனனியின் போனை பிடுங்கி ஜீவானந்தத்திற்கு போன் போடுகிறார் கதிர், அப்போது அவர் நடந்ததை விவரமாக கூறுகிறார். இதனால் போலீசார் ஜனனி மீது தான் தப்பு இருப்பதாக கூறி அவரை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். இந்த சூழ்ச்சியில் இருந்து ஜனனி எப்படி தப்பிக்கப் போகிறார்? ஆதி குணசேகரனை ஜனனி சிக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.