- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கண்விழிக்கும் ஈஸ்வரி; கதிகலங்கிப் போன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் 2-வில் இப்படி ஒரு ட்விஸ்டா?
கண்விழிக்கும் ஈஸ்வரி; கதிகலங்கிப் போன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் 2-வில் இப்படி ஒரு ட்விஸ்டா?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சுய நினைவின்றி இருந்த ஈஸ்வரியின் உடல்நிலையில், திடீரென ஏற்பட்ட மாற்றத்தால் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட் மேல் ட்விஸ்டோடு சென்றுகொண்டிருக்கிறது. இதில் ஆதி குணசேகரனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈஸ்வரிக்கு நினைவு திரும்பிவிடாதா என குடும்பத்தினர் காத்திருக்க, நேற்று யாரும் இல்லாத வேளையில், அவரை வந்து பார்த்திருந்தார் பார்கவி. கனடாவுக்கு செல்லாமல் மருத்துவமனையில் ஈஸ்வரியுடன் பார்கவியை பார்த்த ஜீவானந்தம் அவரிடம் ஏன் கனடா போகவில்லை என கேட்டபோது, ஈஸ்வரி அம்மா இப்படி இருக்கும் போது தன்னால் சுயநலமாக முடிவு எடுக்க முடியவில்லை என சொல்கிறார் பார்கவி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கண்விழிக்கும் ஈஸ்வரி
ஈஸ்வரியை சந்திக்க வந்தபோது பார்கவி, அவர் கையை பிடித்து அம்மா என சொன்னதும், இத்தனை நாட்கள் சுயநினைவின்றி இருந்த ஈஸ்வரிக்கு திடீரென லேசாக கண்விழித்தார். அவர் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்திய நிலையில், பார்கவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற ஜீவானந்தம், எல்லாரும் நல்லா இருக்கனும்னு தான் நீ போன, இப்போ திரும்ப உன்னால் பிரச்சனை வந்துவிடக்கூடாது, புரிந்துகொள் என சொல்லி பார்கவியை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார் ஜீவானந்தம். இதனால் பார்கவி மருத்துவமனைக்கு வந்தது ஜீவானந்தத்தை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.
டாக்டர் கொடுத்த ட்விஸ்ட்
பின்னர் ஈஸ்வரியை பரிசோதிக்க வந்த டாக்டர் அவர் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனிக்கிறார். பின்னர் வெளியே இருந்த ஜனனியிடம் வந்து, யாராவது உள்ளே சென்று ஈஸ்வரியை பார்த்தீர்களா என்று கேட்கிறார். நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று ஜனனி சொன்னதும், யாரோ வந்து அவங்க மனநிலையை மாற்றி இருக்கிறார்கள் என்று டாக்டர் சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதன்மூலம் அந்த நபர் பார்கவி தான் என்கிற விஷயத்தை ஜீவானந்தம் போட்டுடைக்க வாய்ப்பு உள்ளது. அவர் வந்தால் ஈஸ்வரி கண்விழிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
போலீஸ் விசாரணையில் ஆதி குணசேகரன்
மறுபுறம் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள புது போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வருகிறார். அங்கு ஆதி குணசேகரனை பார்த்து அவர் விஷயத்தை சொன்னதும், ஞானம் பொண்ணு வழக்கை விசாரித்தது நீங்க தான, நல்லதா போச்சு, இந்த வழக்கு ஒரு சார்பாக பேசுகிற ஆள் கிட்ட இருந்து தப்பிச்சிடுச்சு என சொல்கிறார். நீங்க என்ன விசாரிக்க வேண்டுமோ விசாரியுங்கள். உங்களுக்கு நூறு சதவீதம் ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என சொல்கிறார் குணசேகரன். இதையடுத்து ஈஸ்வரி அடிபட்டுகிடந்த இடத்தை பார்க்க வேண்டும் என சொல்லும் போலீஸ் அதிகாரி, அந்த அறைக்கு சென்று ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை தேடிப் பார்க்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.