- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரிட்டர்ன் வந்த பார்கவி; விசாரணை வளையத்துக்குள் சிக்கிய ஆதி குணசேகரன்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் 2
ரிட்டர்ன் வந்த பார்கவி; விசாரணை வளையத்துக்குள் சிக்கிய ஆதி குணசேகரன்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி வெளிநாட்டுக்கு செல்லாமல் மீண்டும் திரும்பி வந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான கேஸை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து கொற்றவை விலகிக் கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நீதிமன்ற வாயிலில் தர்ணாவில் ஈடுபட்ட ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை நீதிபதி நேரில் அழைத்து பேசினார். அப்போது கொற்றவையை இனி இந்த வழக்கை விசாரிக்க நியமிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதி, நேர்மையான போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறினார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அறிவுக்கரசி மீது சந்தேகப்படும் ஜனனி
கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு வரும் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா, ஈஸ்வரி அடிபட்டுக் கிடந்த அறையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என தேடுகிறார்கள். அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. உடனே கொற்றவை வந்தபோது அறிவுக்கரசி இந்த ரூமில் இருந்ததாக சொன்னதை நினைவுகூர்ந்த ஜனனி, அவளுக்கு இங்க என்ன வேலை, அப்போ அவ தான் எதோ செய்திருக்கிறாள் என சந்தேகப்படுகிறாள். இதனால் ஆதாரம் அறிவுக்கரசியிடம் இருப்பதை ஜனனி கண்டுபிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட புது போலீஸ் அதிகாரியும் வீட்டுக்கு வருகிறார்.
ஆதி குணசேகரனிடம் விசாரிக்க வந்த போலீஸ்
அவர் நேராக வந்ததும், ஆதி குணசேகரனிடம், நான் இந்த வழக்கோட விவரங்களையெல்லாம் படித்துவிட்டேன். அதில் ஈஸ்வரி தாக்கப்பட்டிருக்கிறார் என்று ரிப்போர்ட் சொல்லுது. அது சம்பந்தமாக உங்க வீட்டில் உள்ள ஆட்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரன், கதிர், அறிவுக்கரசி, கரிகாலன் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை ஆரம்பமாகிறது. அதில் அறிவுக்கரசி தன்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிடுவாரா? இந்த விசாரணையில் உண்மை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கனடா செல்லாமல் திரும்பி வந்த பார்கவி
மறுபுறம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈஸ்வரியின் உடல்நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், ஃபீல் பண்ணும் தர்ஷினி, ஜீவானந்தத்திடம் கண்ணீர்விட்டு அழுகிறார். அந்த சமயத்தில் திடீர் ட்விஸ்டாக பார்கவி மருத்துவமனைக்கு வருகிறார். அவரை பார்த்து ஷாக் ஆன ஜீவானந்தம் நீ ஏன் இங்க வந்த என கேட்க, என்னால் சுயநலமாக முடிவு எடுக்க முடியல சார் என சொல்கிறார் பார்கவி. அவரின் வரவால் இனி தர்ஷனின் கல்யாணத்திலும் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் எபிசோடுகள் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.