- Home
- Cinema
- தொலைக்காட்சி
- திரும்ப வந்த கருணாகரன் ; அதிர்ச்சியில் உறைந்த அன்பு ஆனந்தி... சிங்கப்பெண்ணே அதிரடி திருப்பம்!
திரும்ப வந்த கருணாகரன் ; அதிர்ச்சியில் உறைந்த அன்பு ஆனந்தி... சிங்கப்பெண்ணே அதிரடி திருப்பம்!
Anbu and Anandhi Shocking Movements: அன்பு புரோடக்ஷன் ஹெட் ஆக இருந்த நிலையில், இப்போது மீண்டும் மனோகரனை வேலைக்கு சேர்ந்ததால் சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Singapenne Serial Twist
சிங்க பெண்ணே சீரியலில் நீண்ட நாளுக்கு பிறகு கருணாகரன் மீண்டும் வேலைக்கு வருகிறார் அதனை கண்டு அதிர்ச்சி அடைகிறார் ஆனந்தி மற்றும் அன்பு. ரகுவின் கொலையில் மித்ராவிடம் கேட்கும் அரவிந்த் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இதில் பார்க்கலாம்.
ரீ என்ட்ரி கொடுக்கும் கருணாகரன்:
கருணாகரன் ரகுவின் பிரச்சினையாலும் ஆனந்தியின் ஏற்பட்ட பிரச்சினைகளும் வேலையை விட்டு நின்றார் கருணாகரன். அரவிந்த் சென்று நீங்கள் வந்தால் தான் ஆனந்தியை அழிக்க முடியும் என்று சொல்ல வஞ்சகத்தின் மூலம் எக்ஸ்போர்ட்டுக்கு மீண்டும் வேலைக்கு வருகிறார். அதனை கண்டு அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சௌவ்சௌவ் அனைவரும் பயத்துடன் கருணாகரனை பார்க்கின்றனர். அடாவடியான பேச்சை மீண்டும் தொடருகிறார் கருணாகரன்.
கருணாகரனின் வஞ்சக பேச்சு:
அனைவரும் மதியம் சாப்பாட்டிற்கு மேலே செல்கின்றனர் அப்பொழுது கருணாகரன் ஒவ்வொருவருக்கும் தட்டில் சாப்பாட்டு வைத்து கொடுக்கிறார். இப்பொழுது சாப்பாட்டில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படும் போது கருணாகரன் சோத்துக்கு வழியில்லைனாலும் பேச்சுக்கு குறையே இல்லை என்று மிகவும் கடுமையாக பேசுகிறார் அதற்கு அன்பும் ஆனந்தியும் கோபம் கொண்டு அவரிடம் சண்டை போடுகின்றனர்.
ரகுவின் பேச்சை பற்றி கேட்கும் அரவிந்த்:
மித்ராவிடம் சென்று அரவிந்த் ஆனந்தி பிரச்சினையில கருணாகரனுக்கு சம்பந்தம் இருக்குன்னு ரகு சொன்னானே அதைப்பற்றி உனக்கு தெரியுமா மித்ரா. அது என்ன விஷயம் என்று கேட்கிறார். மித்ரா பயத்தில் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார் ஆனால் அவரது முகத்தில் பயமும் நடுக்கமும் அப்பட்டமாக தெரிகிறது. அதனை சாதகமாக்கிக் கொண்டு மேலும் அவரிடம் கேள்விகளை எழுப்பி அவரை பயமுறுத்துகிறார் அரவிந்த்.அங்கு நின்று கொண்டிருக்கும் கருணாகரன் பதட்ட மடைகிறார். எவனையோ காப்பாத்துறதுக்கு என் பேரை சொல்லிட்டு போயிட்டான் சார் அந்த ரகு என்று அந்த விஷயத்தை மறைக்கிறார் கருணாகரன். மகேஷ் சார் தான் தப்பா புரிஞ்சுகிட்டு பேசினா நீங்க வேற ஏன் சார் என்று கூறுகிறார் கருணாகரன். என்ன மச்சான் நீ என்ன சொல்ற கருணாகரன் நம்பலாமா? என்று சொல்கிறார் அரவிந்த்.
Karunakaran Come Back in Singappenne
நீ இப்ப எதுக்கு தேவையில்லாத விஷயத்தைப் பற்றி என்கிட்ட பேசிகிட்டு இருக்க அன்பு ஆனந்தியும் கருணாகரன் காரணமா சொல்றாங்கனா மகேஷும் அதை நம்பி என்கிட்ட கேள்வி கேட்கிறானா இதுக்கு பதில் சொல்லி ப்ரூப் பண்றது கருணாகரனுடையபொறுப்பு . அந்த விஷயத்துல கருணாகரனுடைய காரணத்தை நான் எப்படி சொல்லி ப்ரூப் பண்ண முடியும் தப்பான கேள்வியை நீ என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க என்று பதட்டத்துடனும் பயத்துடனும் அரவிந்திடம் சொல்கிறார் மித்ரா.
உண்மையை கண்டுபிடிக்க துடிக்கும் அரவிந்த்:
மித்ரா பேசியதில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அரவிந்த் ஆனந்தி பிரச்சனைக்கும் மித்ராவுக்கும் கருணாகரனுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் அரவிந்த் இதை நம்ம சும்மா விடக்கூடாது எப்படி வேண்டாலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் அரவிந்த். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைந்தது.