- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கொற்றவைக்கு தடைவிதித்த நீதிபதி; ஜனனிக்கு அடிமேல் அடி கொடுக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கொற்றவைக்கு தடைவிதித்த நீதிபதி; ஜனனிக்கு அடிமேல் அடி கொடுக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம் சவால்விட்ட ஜனனிக்கு என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. இதில் ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தான் தாக்கினார் என்கிற ஆதாரம் அறிவுக்கரசியிடம் சிக்கிவிட, அதைத்தேடி ஜனனி மற்றும் அந்த வீட்டு மருமகள்கள் அலைகிறார்கள். அப்போது அவர்களை வீட்டை விட்டு விரட்டுவதாக சவால் விடுகிறார் ஆதி குணசேகரன். அதுமட்டுமின்றி ஜனனியிடம் இருந்து சக்தியை பிரிக்க உள்ளதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு கடுப்பான ஜனனி, அரிவாளை எடுத்து வந்து, அனைவரையும் மிரட்டுகிறார். இப்படி நேற்றைய எபிசோடு அனல்பறக்க இருந்த நிலையில், இன்று என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
நீக்கப்படும் கொற்றவை
போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதியப்படாததால், நீதிபதியை சந்திக்க செல்லும் ஜனனியிடம், தன்னை இந்த கேஸில் இருந்து விலக்கிவிட்டதாக கூறுகிறார் கொற்றவை. புதிதாக வருபவர் தான் இந்த கேஸை விசாரிப்பார் என்றும் கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, இது தொடர்பாக நீதிபதியிடம் முறையிட முயல்கிறார். ஆனால் அவர் பிசியாக இருப்பதாக கூறி தடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அடுத்த இரு தினங்கள் விடுமுறை என்பதால், இனி திங்கட்கிழமை தான் பார்க்க முடியும் என சொல்கிறார்கள். இதனால், இன்று எப்படியாவது நீதிபதியை சந்தித்துவிட வேண்டும் என திட்டம்போடுகிறார் ஜனனி.
தர்ணாவில் இறங்கிய ஜனனி
பின்னர் நந்தினி, ரேணுகா மற்றும் தர்ஷன் ஆகியோருடன் இணைந்து கோர்ட் வாசலில் தர்ணாவில் ஈடுபடுகிறார் ஜனனி. அப்போது அந்த வழியாக காரில் வந்த நீதிபதி, இறங்கி வந்து என்ன பிரச்சனை என கேட்கும் போது, எங்களுடைய அக்காவை குணசேகரன் கொலை செய்ய முயற்சி செய்ததாக முறையிடுகிறார். இந்த விவகாரம் மீடியாவிலும் வருகிறது. இதை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் ஆதி குணசேகரன், கதிர் மற்றும் அறிவுக்கரசி ஆகியோர் ஷாக் ஆகின்றனர். அந்த கொலகாரிக்கு நான் தண்டனை வாங்கிக் கொடுக்கிறேன் என்று வீர வசனம் பேசுகிறார் ஆதி குணசேகரன்.
நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் நீதிபதியிடம், இந்த கேஸை கொற்றவை விசாரிக்க உத்தரவிடக் கோரி ஜனனி முறையிடுகிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, நேர்மையான அதிகாரி தலைமையில் இந்த கேஸ் விசாரிக்கப்படும் என்றும், கொற்றவை இனிமேல் இந்த வழக்கில் தலையிடக் கூடாது என நான் உத்தரவிடுகிறேன் என கூறுகிறார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த வழக்கு ஆதி குணசேகரனுக்கு சாதகமாக திரும்புவதால் செய்வதறியாது திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் ஜனனி. அடுத்த என்ன நடக்கப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.